districts

img

நாமக்கல்: மின்சார சிக்கன வார விழா

நாமக்கல், டிச.19- மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு மின்சார  வாரியத்தின் நாமக்கல்லில் மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில்  மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழ கத்தின் மூலம் மின்சார சிக்கன வார  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், டிச.14 ஆம் தேதியன்று முதல் டிச.20 ஆம்  தேதியன்று வரை நடத்தப்பட்டு வரு கின்றன. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி பாதுகாப்பாக மின்சா ரத்தை கையாள்வது குறித்தும் பல் வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின் றன. இதன் ஒரு பகுதியாக, மின்சார சிக்கன விழிப்புணர்வு பேரணியை மின்சார வாரியத்தின் நாமக்கல்  செயற்பொறியாளர் அலுவலகத்தி லிருந்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா  பி சிங் தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது மோகனூர் சாலை,  மணிக்கூண்டு, பிரதான சாலை,  திருச்சி சாலை வழியாகச் சென்று, பேரணி தொடங்கிய இடத்தில் நிறை வடைந்தது. இதில் மின் சேமிப்பு மற்றும் மின் பாதுகாப்பு குறித்து மின்சார வாரிய பணியாளர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்று சென்றனர். இந்நிகழ்ச்சியில், நாமக்கல் மின்  பகிர்மான வட்ட மேற்பார்வை  பொறியாளர் கே.பாலசுப்பிரமணி யம், செயற்பொறியாளர் ஆ.சபா நாயகம், நாமக்கல் கோட்ட உதவி  செயற்பொறியாளர்கள் ஆனந்த் பாபு, சௌந்தரபாண்டியன் உள் ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

;