தாராபுரம், செப் 6- தாராபுரத்தில் மின் சிக்கனம் மற் றும் மின்திறன், மின்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் பிஷப்தார்ப் கல்லூரி கலைய ரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பல்லடம் மின் பகிர்மான வட்டம் மற்றும் மத்திய திற னூக்கச் செயலகம் இணைந்து நடத் திய விழிப்புணர்வு முகாமிற்கு தாரா புரம் செயற்பொறியாளர் வ. பாலன் தலைமை வகித்தார். காங்கேயம் செயற்பொறியாளர் கணேசன், பல் லடம் செயற்பொறியாளர் ரத்தினகு மார் மத்திய பொது அலுவலர் திருஞா னசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் ஜவகர் பேசுகையில், தமிழக அரசு இலவச மின்சாரம் மற்றும் சுயநிதி திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க உத்தரவிட் டுள்ளது. அதன்படி, தாராபுரம் வட்டத் தில் தகுதியான பயனாளிகள் அனை வருக்கும் மின் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. விவசாயிகள் மின்சா ரத்தை மிகவும் சிக்கனமாக பயன்ப டுத்த வேண்டும். தேவையற்ற நேரங் களில் மின் சாதனங்கள் இயக்கு வதை நிறுத்தி வைக்க வேண்டும்.
சூரிய மின்சக்தி திட்டம், மானியத்து டன் மின் மோட்டார் வாங்கும் திட்டம் உள்ளிட்ட தமிழக அரசு வழங்கும் நலத்திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலவச மின் இணைப்பு பெற்ற விவ சாயிகள் மின்மோட்டாரை தேவை யான அளவு மட்டும் பயன்படுத்த வேண்டும். தேவையின்றி மின்சா ரத்தை பயன்படுத்தும் போது மின்வா ரியத்திற்கு இழப்பு ஏற்படுகின்றது. மேலும் சில்க் வயர்களை பயன்ப டுத்தக் கூடாது. இதனால் அதிக விபத் துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனை தவிர்க்க வேண்டும். சூரிய ஒளி மின் திட்டத்தின் மூலம் சூரிய ஒளி மின்சார பேனல்கள் அமைத்து மின்உற்பத்தி செய்து பயன்படுத்த முன்வரவேண்டும். இதே போல மீத முள்ள மின்சாரத்தை மின்வாரி யத்துறைக்கு விற்பனை செய்யும் வாய்ப்பு உள்ளது எனவும் மின்திறன் மேலாண்மை, விவசாயிகள் தர மான பம்புசெட்டுகளை பயன்படுத்து தல், கெப்பாசிட்டர் பயன்பாடு உள் ளிட்ட பல்வேறு மின்சிக்கனம் குறித்து பேசினார். பயிற்சி முகாமில் பங் கேற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கப் பட்டது. முகாமில் மின் அளவியல் ஆய்வகம் டாக்டர் விஜய் ஈஸ்வரன், மற்றும் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் விவசாய சங்க தலைவர்கள், விவசாயிகள் ஏராளமா னோர் பற்கேற்றனர்.