districts

img

தக்காளி விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

தருமபுரி, பிப்.19- பாலக்கோடு பகுதியில் தக்காளி வரத்து  அதிகரிப்பால், அதன் விலை வீழ்ச்சி அடைந் துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தக் காளி மார்கெட்டிற்கு தினந்தோறும் 300 டன் அளவிற்கு தக்காளி வரத்து உள்ளது. இச் சந்தையிலிருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சேலம், ஈரோடு போன்ற வெளி மாவட்டங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய் யப்படுகிறது. இந்த மார்கெட்டிற்கு பாலக் கோடு சுற்றுவட்டார விவசாயிகள் மற்றும் காரி மங்கலம், பெல்ரம்பட்டி, பொப்பிடி சோமன ஹள்ளி, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, பேளாரஹள்ளி, எலங்காளப்பட்டி உள்ளிட்ட பகுதி விவசாயிகள் தக்காளிகளை கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோடை வெயில் அதிகரிப்பு காரணமாக அதிகளவில் தக்காளி பழங்கள் அதிக அளவில் பழுக்கி றது. இதனால் தக்காளி வரத்து அதிகரித்த தால் மார்கெட்டிற்கு வருகிறது. தக்காளி ஒரு  கிலோ 10 முதல் 12 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. 15 கிலோ கொண்ட ஒரு  கூடை தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனையாகி றது. சென்ற மாதங்களில் கிலோ 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனையானது குறிப்பிடத் தக்கது. வரும் நாட்களில் மேலும் விலை குறை யும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.