districts

img

திருப்பூரில் போதை விழிப்புணர்வு நடைப்போட்டி

திருப்பூர், செப்.22 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக மாணவ மாணவிகளுக்கு போதை விழிப்பு ணர்வு நடைப்போட்டி நடைபெற்றது.  நாட்டு நலப்பணித் திட்ட தினத்தை  கொண்டாடும் வகையில் கடந்த சில  நாட்களாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சி யாக வியாழக்கிழமை போதை விழிப் புணர்வு நடைப்போட்டி நடத்தப்பட் டது.  இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித்  திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். வடக்கு  காவல் நிலைய முதல்நிலை காவலர்  முகமது ஷஃபி கலந்து கொண்டு  மெல்லோட்டத்தை துவக்கி வைத் தார். அப்போது அவர் கூறுகையில், ‘போதை, சாவின் பாதை. ஏனெனில்  போதை பொருட்களை பயன்படுத் தும்போது நமது உடலை உருக் கும், புற்றுநோய் மற்றும் பல நோய் களை உண்டாக்கும், போதையை ஒழித்து நமது நாட்டையும், நமது  சமூகத்தையும், நமது தலைமுறை யையும் காக்க வேண்டும், போதை  இல்லா தமிழகமாக மாற்ற வேண்டும்  என்று கூறினார்.

பிறகு மாணவ செயலர்கள் சுந்த ரம், பூபதிராஜா, அருள்குமார், பூபா லன் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் கல்லூரி வளாகத்தில் இருந்து செளடாம்பிகை திருமண மண்டபம் வரை போதை தடுப்பு விழிப்புணர்வு வாசகங்களை நெஞ்சில் ஏந்தியபடி நடைப்போட்டியில் பங்கு பெற்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில் முழக்கங்களை எழுப்பினர். இதில் மாணவிகளில், வெள்ளை அணியை சேர்ந்த துர்க்கா  தேவி முதல் இடத்தையும், நீல நிற  அணியை சேர்ந்த லோகநாயகி இரண்டாம் இடத்தையும், மாணவர் களுக்கான போட்டியில் சிவப்பு நிற  அணியை சேர்ந்த லோகேஸ்வரன் முதல் இடத்தையும், அதே அணியை சேர்ந்த தீபன் இரண்டாம் இடத்தை யும் வென்றனர்.  மதுவிலக்கு அமலாக்க பிரிவு  காவல் துணை ஆய்வாளர் முகமது, சாந்தி, முதல் நிலை காவலர்  குமரகுரு, முன்னாள் மாணவ சங்க  பிரதிநிதி கண்ணன், பொன்மூர்த்தி கலந்து கொண்டனர். இந்நிகழ்விற் கான ஏற்பாடுகளை கல்லூரி முதல் வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

;