districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சேலம் : 151 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து

சேலம், மே 29- சேலம் சரகத்தில் கைப்பேசி பேசியபடி வாகனம் ஓட்டிய  151 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப் பட்டுள்ளது. சேலம் சரகத்தில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சிவப்பு விளக்கு மீறிச்செல்வது, சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றிச்  செல்வது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப் பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து கைப்பேசி பேசியபடி வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது உள் ளிட்ட விதிகளை மீறுவோருக்கும் 3 மாதங்களுக்கு ஓட்டுநர்  உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. சேலம் சரகத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் கைப்பேசி பேசியபடி வாகனம்  ஓட்டிய 151 பேரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட் டுள்ளது. வாகன விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 106  பேரின் ஓட்டுநர் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட் டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.

பாலப் பணிகளை விரைந்து முடித்திடுக

நாமக்கல், மே 29- பள்ளிப்பாளையத்தில் நடைபெற்று வரும் பாலப் பணி களை விரைந்து முடிக்க வேண்டும் என ஆட்டோ தொழிற் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ஆட்டோ தொழிற்சங்கத்தின் (சிஐடியு) மகாசபைக் கூட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள  ஆவரங்காடு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத் திள், பள்ளிபாளையத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சங்கம்  வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆட்டோ தொழிலா ளர்களை மேம்பாலம் கட்டும் பணிகள் காரணமாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கூடாது. பள்ளிபாளையம் நால்ரோடு பகுதியிலே ஆட்டோ தொழிலாளருக்கு தேவை யான ஸ்டாண்ட் அமைத்து தர வேண்டும். மேலும் 30க்கும்  மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர்,  கூட்டத்தின் முடிவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட் டனர். இதில் ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இலவச வீடுகள்: ஆட்சியர் ஆய்வு

தருமபுரி, மே 29- செம்மாண்டகுப்பம் ஊராட்சியில் நரிக்குறவர் இன மக்க ளுக்கு இலவச வீடுகள் கட்டும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு செய்தார். தருமபுரி வட்டம், செம்மண்டகுப்பம் ஊராட்சியில் தாட்கோ மூலம் நரிக்குறவர் இன மக்களுக்கு ரூ.45 லட்சத்து  70 ஆயிரம் மதிப்பீட்டில் 10 இலவச வீடுகள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமானப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து, செட்டிகரை ஊராட்சிக் குட்பட்ட நீலாபுரம் பனந்தோப்பு பகுதியில் மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.18 லட்சத்து 16  ஆயிரம் மதிப்பில் புதிய குளம் அமைக்கும் பணி, பனந் தோப்பு பகுதியில் 350 மரக்கன்றுகள் நடவு செய்து பராம ரித்து வரும் பணி ஆகியவற்றை ஆட்சியர் ஆய்வு செய்தார்.  அப்போது, பொதுமக்களிடம் குடிநீர், கழிவறை, சாலை  உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த  ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமை உதவித்திட்ட அலுவ லர் ஷகிலா, தாட்கோ செயற்பொறியாளர் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மா.சத்யா, கே.ரங்கநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

சிறுவன் கொலை வழக்கு – 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை!

கோவை, மே 29- 16 வயது சிறுவனை கொலை செய்து எரித்த வழக்கில்,  சிறுவர்கள் 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருப்பூரை சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இந்த சிறுவன்  கோவையில் உள்ள ஒரு ஐ.டி.ஐ.யில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே ஐ.டி.ஐ.யில் கோவை போத்தனூர் போலீஸ்  நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 16 வய துடைய 2 சிறுவர்கள் படித்தனர். அப்போது அவர்களுடன் திருப்பூர் சிறுவனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் நண்பர்க ளாக பழகி வந்தனர். இந்த நிலையில், திருப்பூர் சிறுவன் தான்  வாங்கிய புதிய செல்போனை நண்பர்களான மற்ற 2 சிறுவர்க ளும் சேர்ந்து திருடியதாக தெரிகிறது. நண்பர்கள் தான் தனது  செல்போனை திருடியதை அறிந்த திருப்பூர் சிறுவன் கடந்த  12-10-2013 ஆம் ஆண்டு கோவை வந்து தனது செல்போனை  தருமாறு 2 சிறுவர்களிடம் கேட்டார். அப்போது அவர்களுக் குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோவையைச்  சேர்ந்த 2 சிறுவர்களும்,  திருப்பூர் சிறுவனை போத்த னூர் பகுதியில் ஒரு மலைப்பகுதிக்கு அழைத்து சென்று  கல்லால் தாக்கி கொலை செய்தனர். பின்னர் மறுநாள் அந்த  சிறுவனின் உடலை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த னர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போத்தனூர் போலீசார்  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி இரண்டு சிறுவர்களையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை ஜே.எம். 4ஆவது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சரவணபாபு திருப்பூர் சிறுவனை கொலை செய்து எரித்த வழக்கில் 2 சிறுவர்களுக்கும் தலா 3  ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

ரூ.30 ஆயிரம் லஞ்சம்: இளநிலை பொறியாளருக்கு சிறை!

கோவை, மே 29- ரூ. 30 ஆயிரம் லட்சம் வாங்கிய வழக்கில், இளநிலை பொறி யாளருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  கோவை,  சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது வீட்டின் அருகே மின் கம்பம் ஒன்று இடையூறாக இருந்தது. இதனை அகற்றக் கோரி கடந்த 2012 ஆம் ஆண்டு  சரவணம்பட்டி மின் வாரிய அலுவலகத்தில் பணியாற்றிய இளநிலை பொறியாளர் டி.எம்.ரவீந்திரன் (60) என்பவரை சந்தித்து கோரிக்கை வைத்தார். இதற்கு, அவர் கடந்த 2012  ஜூலை 5ஆம் தேதி தேவராஜிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கி யதாக தெரிகிறது. அப்போது அங்கு மறைந்து இருந்த கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எம்.ரவீந்திரனை கைது  செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை ஊழல் தடுப்பு  சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில்  தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் வழக்கை நீதிபதி எஸ்.மோகனா ரம்யா விசாரித்தார். அப்போது அவர் டி.எம்.ரவீந்தி ரனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபரா தமும் விதித்து தீர்ப்பளித்தார்.

பாக்கு மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை

உதகை, மே 29- கூடலூரை அடுத்துள்ள பிதர்காடு பகுதி யில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டுயானை அங்கிருந்த பாக்கு மரங்களை முறித்து சேதப்படுத்தியது. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த  பிதர்காடு பகுதியில் மாணிவயல் கிராமத்துக் குள் திங்களன்று நள்ளிரவில் காட்டு யானை  ஒன்று நுழைந்தது. தொடர்ந்து அப்பகுதியில் உலவிய யானை குடியிருப்பு பகுதியில் இருந்த வீட்டின் மதிற்சுவரை தாண்டி, அங்குள்ள பாக்குத் தோட்டத்துக்குள் புகுந்து, அங்கிருந்த பாக்கு மரங்களை முறித்து சேதப்படுத்தியது. தகவலறித்து வந்த வனத்துறையினர் யானையை அடர்ந்த காட்டுப்பகுதியில் விரட்டும் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொது மக்கள் இரவு நேரத்தில் வெளியில் நடமாட  வேண்டாம் எனவும், பகலில் எச்சரிக்கையு டன் இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ள னர்.

விவசாயிகளுக்கு மிரட்டல் – விவசாய சங்கம் புகார்!

கோவை, மே 29- காட்டு யானை பாகுபலியின் நடமாட் டத்தை காரணம் காட்டி, வன ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் விவசாயிகளை மிரட்டி  வருவதாக தமிழக விவசாயிகள் சங்கம் புகார்  தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சமயபுரம் என்னுமிடத்தில் காட்டு யானை (பாகுபலி) அடிக்கடி நடமாடி  வருகிறது. நெல்லி மலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் இந்த யானை, மேட் டுப்பாளையத்திலிருந்து வனபத்திரகா ளியம்மன் கோவில் செல்லும் சாலையை கடந்து,  சமயபுரம் குடியிருப்பு வீதி வழியே,  அங்குள்ள தனியார் தோட்டத்தை கடந்து, பவானியாற்றின் கரை பகுதிக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் அண்மை காலமாக இந்த  யானை வழக்கமான பாதையை விடுத்து ஊருக்குள் நடமாடுவதாக கூறப்படுகிறது. இதற்கு யானை கடந்து செல்லும் தனியார்  தோட்ட விவசாயி தனது வாழை மரங்களை  காப்பாற்ற தோட்டத்தை சுற்றி சோலார் மின்வேலி அமைத்ததே காரணம் என இங் குள்ள வன ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் குற்றஞ்சாட்டி தொடர்புடைய விவ சாயியை மிரட்டி வருவதாக புகார் எழுந்துள் ளது. தனக்கு சொந்தமான பட்டா நில விவ சாய தோட்டத்தில் தனது விவசாய பயிரை காக்க முறையான அனுமதி பெற்று சோலார்  மின்வேலி அமைத்துள்ளதோடு, யானை வந்தால் இவ்வழியே கடந்து செல்ல வழிப் பாதையினையும் விட்டுள்ள நிலையில் ஒரு  சிலர் விவசாயியை மிரட்டி வருவது கண்டிக் கத்தக்கது என தமிழக விவசாய சங்கத்தி னர் வேதனை தெரிவிக்கினறனர். மேலும்,  இவ்விவகாரத்தில் வனத்துறை உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெ னில் போலி வன ஆர்வலர்களை கண்டித்து  தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் போராட் டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.

காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாய தாமரை

ஈரோடு, மே 29- ஈரோடு காவிரி ஆற்றில் ஆக்கிரமித்துள்ள  ஆகாய தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக  ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ள னர். ஈரோடு மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதா ரமாக காவிரி ஆறும், பவானி ஆறும் உள்ளது.  இதில், காவிரி ஆற்றில் கடந்த மாதம் போதிய  நீர்வரத்து இல்லாததால் தண்ணீர் குறைந்து,  பாறைகளாக காட்சியளித்தது. இந்நிலை யில், மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2,100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஈரோடு மாவட்டத்தின் அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, பிபெ  அக்ரஹாரம் ஆகிய பகுதிகளை கடந்து மாந கராட்சி பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் வெண்டிபாளையம் தடுப் பணையில் தடுக்கப்பட்டு, தேக்கி வைக்கப் பட்டுள்ளது. இதனால் ஈரோடு காவிரி ஆற்றின்  சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரத்துவங்கியுள்ளது. இந்நி லையில், கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் தண்ணீரே தெரியாத  அளவுக்கு ஆகாய தாமரைகள் ஆக்கிர மித்துள்ளன. இந்த ஆகாய தாமரைகள் நீரை விரைவாக உறிஞ்சி ஆவியாக்கி விடும். எனவே, காவிரி ஆற்றில் ஆக்கிரமித்த ஆகாய தாமரைகளை அகற்ற மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக் களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலர் கண்காட்சியை காண 2.41 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

உதகை, மே 29-  நீலகிரி மாவட்டத்தில், ஆண்டுதோறும் மே மாதங்களில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இதை காண்பதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர்.  இந்நிலையில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடப்பாண்டு மலர் கண்காட்சி கடந்த 10 ஆம் தேதி துவங்கி  மே 26 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், சுமார் 17 நாட்களில் 2 லட்சத்து 41 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை  தந்துள்ளனர். கடந்தாண்டு மலர் கண்காட்சி 5 நாட்கள் நடை பெற்றது. அதில், 1 லட்சத்து 30 ஆயிரம் சுற்றுலாப் பயணி கள் வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருநங்கைகள், திருநம்பியரின் கல்வி செலவை அரசே ஏற்கும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருநங்கைகள், திருநம்பியரின் கல்வி செலவை அரசே ஏற்கும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு திருப்பூர், மே 29- மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உயர்கல்வி பயிலும் திரு நங்கைகள் திருநம்பியர் ஆகியோருக்கு கல்வி மற்றும் இதர  கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்வி செலவுகளையும் அரசே ஏற்கும். தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தின்  மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து திருநங்கைகள், திருநம்பிகள் வருமான உச்சவ ரம்பு ஏதுமின்றி பிற உதவித் தொகை ஏதேனும் பெற்று வந்தா லும், இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம் என்றும், வேறுதுறை யில் மூலம் கல்வி உதவி பெற்ற பின் அதைவிடுத்து மீதம் உள்ள  தொகையினை இத்திட்டத்தின் கீழ் பெறலாம். 2024 -2025 ஆம்  நிதியாண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும். அரசுப்  பள்ளிகளில் படித்து ஏழரை விழுக்காடு திட்டத்தின் கீழ் தமிழ் நாடு அரசால் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கட்டணப் பயன்கள் அனைத்தும் முதற்கட்டமாக பட்டப்படிப்பு மற்றும்  பட்டயப்படிப்பு பயிலும் அனைத்து திருநங்கை மற்றும் திரு நம்பிகளுக்கு தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும். எனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  உயர் கல்வி பயில விரும்பும் திருநங்கைகள், திருநம்பிகள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கம் மாவட்ட சமூக நல அலுவலகம் அறை எண் 36 இல் சமர்பிக்க  வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

கலைஞர் 101 ஆவது பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்க திமுக முடிவு

திருப்பூர், மே 29 - திமுக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 101 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட் டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாகக் கொண்டா டுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்  மாவட்ட அவைத்தலைவர் க.நடராஜ் தலைமையில்,  மாவட்டச் செயலாளர், க.செல்வராஜ் எம்எல்ஏ முன்னி லையில் செவ்வாயன்று முரசொலி மாறன் வளாகத்தில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் தெற்கு மாநகரச் செயலாளர் டி.கே.டி  மு.நாகராசன், வடக்கு மாநகரச் செயலாளர், மேயர் ந.தினேஷ் குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ஜூன் 3 ஆம் தேதி கலைஞர் 101ஆவது பிறந்தநாளன்று அனைத்துப்  பகுதிகளிலும் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மாலை அணி வித்து, கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கி, நலத்திட்ட உதவி கள் வழங்கி கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

புகையிலை பொருட்கள் கடத்தியவர்களின்  மளிகைக் கடைகளுக்கு சீல்

அவிநாசி, மே 29- திருப்பூர் மாவட்டம், அவிநாசி காவல் உட்கோட்டத்திற்கு  உட்பட்ட பெருமாநல்லூர் அருகே கடந்த வாரம் விபத்துக்குள் ளான காரில் இருந்து,  பல மூட்டை  புகையிலைப் பொருட்கள்  கைப்பற்றப்பட்டது.  இதையடுத்து இதில், தொடர்புடைய  ஏழு பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநி லத்தைச் சேர்ந்த  கோபராம் பெருமாநல்லுரில் நடத்தி வந்த மளிகை கடை மற்றும் அவிநாசி கைகாட்டி புதூரில்  மளிகைக் கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த  டூராராம் மாதாராம் ஆகியோருக்கு சொந்தமான மளிகை  கடைகளுக்கும், தங்கியிருந்த வீட்டிற்கு போலீஸார், வரு வாய்த் துறையினர் புதனன்று சீல் வைத்தனர்.

நாய்கள் கடித்து மான் பலி

அவிநாசி, மே 29- அவிநாசி அருகே நாய்கள்  கடித்ததில் பெண் மான் உயிரி ழந்தது. அவிநாசி  அருகே பாப்பாங்குளம் ஊராட்சியில் உள்ள  குளத்தில் நாய்கள் கடித்து 2 வயதுடைய பெண் மான் உயிரிழந் தது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவ லையடுத்து சம்பவயிடத்துக்கு வந்த வனத்துறையினர், மானை மீட்டனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்,  2 வயதுடைய பெண் மானின் பின்பகுதியில் நாய்கள் கடித்த தில் பலத்த காயங்கள்  ஏற்பட்டு மான் உயிரிழந்துள்ளது. மான்  இறந்து இரு நாட்கள் ஆனதால், பிரேத பரிசோதனை  செய்ய வில்லை. இப்பகுதியிலேயே அடக்கம் செய்துவிட்டோம் என் றனர்.

தரமான உரம் வழங்க கோரிக்கை

தரமான உரம் வழங்க கோரிக்கை உடுமலை, மே 29- உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதி விவசாயிகள் தர மான உரம் மற்றும் பூச்சி மருந்துகள் முறையான விலையில்  கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்  கோரிக்கை வைத்து உள்ளார்கள். தற்போது பெய்த பருவ மழையால் அணைகள் மற்றும்  விவசாய நிலங்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் குளம்  குட்டைகளில் நீர் உள்ளது. எனவே ஆற்றுப் பகுதி மற்றும்  குளத்துப் பாசன விவசாயிகள் நெல் மற்றும் கரும்பு பயிரிடப் பட்டுள்ளது. மீதம் உள்ள நிலப்பரப்பில் மக்காச்சோளம் மற் றும் சிறுதானியங்கள் விவசாயம் செய்து உள்ளார்கள். ஏற்க னவே பல தனியார் விதை நிறுவனங்களிடமிருந்து தரம் இல் லாத விதை மற்றும் உரங்களால் போதிய விளைச்சல் இல்லா மல் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தரமான  விதை மற்றும் உரம் நியாமான விலையில் கிடைக்க தமிழ் நாடு  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளார்கள். இது குறித்து விவசாயிகள்  கூறுகையில், கடந்த காலங்களில் தரமான விதை மற்றும்  உரம் குறித்து அறியாமல் பெரிய இழப்பு ஏற்பட்டுவிட்டது. மேலும், எங்களுக்குப் பயிர் காப்பீடு உள்ளிட்ட எந்த நிவாரண மும் கிடைக்கவில்லை. எனவே அரசு மற்றும் வேளாண்துறை  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள்.

படகு போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

படகு போட்டிகளில் பங்கேற்க அழைப்பு உதகை, மே 29– படகு இல்லத்தில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சுற்றுலாத் துறை வெளியிட்ட அறிக்கை யில், உதகையில் படகு இல்லத்தில் சுற்றுலாத் துறை சார் பில், கோடை விழாவின் ஒரு பகுதியாக, இம்மாதம் 31 ஆம்  தேதி முதல் 2 ஆம் தேதி வரை ஆண்கள் இரட்டையர், பெண் கள் இரட்டையர், தம்பதியர்கள், பத்திரிகையாளர், துடுப்பு  படகு போட்டி மற்றும் அரசு அலுவலர்களுக்கான போட்டி கள் தனித்தனியே நடத்தப்பட உள்ளன.  இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசு துறை மற்றும் அரசு சாரா  அலுவலர்கள், உள்ளூர் பொது மக்கள், சுற்றுலாப்பயணிகள் மற்றும் பத்திரிகை, ஊடக துறையினர் பங்கேற்று சிறப்பிக்க லாம். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

வருவாய்த்துறை சங்க நிர்வாகிகள் தேர்வு

வருவாய்த்துறை சங்க நிர்வாகிகள் தேர்வு சேலம், மே 29- தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்திற்கு 2024 -  2026 ஆம் ஆண்டுக்கான சேலம் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தலைவர் உட்பட பதவிகளுக்கு நிர் வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி,  தலைவராக அருள் பிரகாஷ், செயலாளராக அர்த்தனாரி,  பொருளாளராக அகிலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். மேலும் துணைத்தலைவர்களாக பிரபு, கோபால கிருஷ்ணன், சாஜிதா பேகம், அசோக் ஆகியோரும், இணைச் செயலாளர்களாக முருகபூபதி, சுமதி, சிவக்குமார், கோவிந்த ராஜ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சங் கத்தின் தேர்தல் ஆணையர் பிரகாஷ், வெற்றி பெற்ற தற்கான சான்றிதழ்களை வழங்கினார்.

பேருந்து இயக்கப்படாததால் அவதி
பேருந்து இயக்கப்படாததால் அவதி உதகை, மே 29- பெரும்பாலான கிராமப்புற பேருந்துகளை சுற்று பேருந் துக்கு இயக்கப்பட்டதால் கிராமப்புறப் பயணிகள் கடுமை யாக பாதிக்கப்பட்டன. நீலகிரி மாவட்டம், உதகையில், கோடை சீசனை ஒட்டி  அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 100 ரூபாய் கட்டணத் தில் அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா,  தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்று பேருந்து இயக்கப்பட்டது. இந்த சுற்று பேருந்தால் சுற்றுலாப்  பயணிகள் பயனடைகின்றனர். அரசு போக்குவரத்திற்கும் நிதி  வருவாய் வருகிறது. இருந்தபோதிலும், கிராமப்புற பேருந்து  மற்றும் வழித்தட பேருந்துகளை சுற்றுப்பேருந்தாக இயக்கப் படுவதால் பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து கிடைக்காமல் அவதி அடைகின்றனர்.  இந்நிலையில், கடந்த விடுமுறை நாட்களில் அணிக் கொரை, தொரை ஹட்டி, அத்திக்கல், தும்மனட்டி, கிண்ணக் கொரை, மற்றும் குன்னூர், கோவை வழித்தட பேருந்துகளை  சுற்று பேருந்துக்கு அதிகளவில் இயக்கப்பட்டதால் கடந்த  இரண்டு நாட்களாக குறிப்பாக, கிராமப்புறங்களுக்கு செல் லும் பயணிகள் பேருந்து கிடைக்காமல் கடுமையாக பாதிக் கப்பட்டனர். சீசன் சமயத்தின் போது பொதுமக்கள் பாதிக் காத வகையில் அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் சுற்று  பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர்.

சாலையோரம் 500 மரக்கன்றுகள் நட முடிவு

ஈரோடு, மே 29- பவானியைச் சுற்றி செல்லும் வகையில்  புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சா லையின் இருபுறங்களிலும் முதல் கட்டமாக 500 மரக்கன்றுகள் நட நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. ஈரோடு மாவட்டம், பவானி – மேட்டூர் சாலையில், குருப்பநாயக்கன்பாளையம் அருகே பிரிந்து வலதுபுறமாக செல்லும் புறவ ழிச்சாலை, பவானி – அந்தியூர் சாலை, பவானி  – அத்தாணி சாலை, பவானி – கவுந்தப்பாடி சாலையை கடந்து சேலம் – கோவை தேசிய  நெடுஞ்சாலையில் இணைகிறது. சுமார் 8  கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்ப டும் சாலைப்பணிகள் தற்போது நிறைவடை யும் தருவாயில் உள்ளது. இச்சாலையின் இரு புறங்களிலும் நிழல் தரும் மரங்கள் நடுவதற்கு  நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 500 மரக்கன்றுகள் நட  முடிவு செய்யப்பட்டு, விரைவில் அதற்கான  பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. புதிதாக அமைக்கப்பட்ட சாலை யில், மேலும் மரக்கன்றுகள் நட விரும்பும் தன் னார்வலர்களும் ஆர்வமுடன் மரம் வளர்க் கும் பணியில் பங்கேற்கலாம் என நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத் துள்ளனர்.

 


 

 


 

 

;