districts

img

குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து விணாகும் குடிநீர்

கோவை, டிச. 31- கோவை பீளமேடு அருகே குடிநீர் குழாய் உடைந்து ஒரு மாதத்திற்கு மேலாக சாலையில் குடிநீர் தேங்கி வீணாகி வரு வதால் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். கோவை பீளமேடு தண்ணீர் பந்தலை அடுத்த சேரன் மாநகர் சாலையையும், கொடி சியாவையும் இணைக்கும் பிரதான சாலை யில் குடிநீர்க் குழாய் உடைந்து ஒரு மாதத் திற்கும் மேலாக சாலை முழுவதும் குடி நீர் வெளியேறி வீணாகி வருகிறது. இப் பகுதியினை சுற்றி சுமார் 100க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலை யில், குடிநீர் சாலையில் தேங்கி வீணாவ தால் குடிநீர் சரியாக வருவதில்லை. ஆகவே, குடிநீர் குழாயை சீரமைக்க உடன டியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

;