districts

img

டாக்டர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது முனைவர் கா.அ.மணிக்குமார் தேர்வு

ஈரோடு, அக்.9-  டாக்டர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருதுக்கு முனை வர் கா.அ.மணிக்குமார் தேர்வு செய் யப்பட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும், டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்களின் நினைவு நாளையொட்டி, டிசம்பர் மாதம் “டாக்டர் வா.செ.குழந்தைசாமி அறக் கட்டளை” சிறந்த ஆய்வாளர்களுக்கு விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு, டாக்டர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விரு துக்கு உரியவர்களைத் தேர்வு செய்யும்  நிபுணர்கள் குழுவினர், முனைவர் கா.அ. மணிக்குமாரை தேர்வு செய்துள்ளனர். மணிக் குமார் ஈரோடு வாசவி கல்லூரியில் வரலாற் றுத்துறை பேராசிரியராகப் பணியாற்றியுள் ளார். தமிழ்நாடு அறிவொளி இயக்கத்தில் பொறுப்பெடுத்து சிறப்பாக கலை நிகழ்ச்சி கள் நடத்தினார். மத்தியப்பிரதே சம், சாகர் மாவட்டத்திலுள்ள விவே கானந்தா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். வேலூர் புரட்சி உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இந்த விருது, டாக்டர் வா.செ. குழந்தைசாமியின் 6 ஆம் ஆண்டு  நினைவு நாளான 11-12-2022 அன்று  நடைபெற உள்ள “டாக்டர் வா.செ.குழந்தை சாமி தமிழ் மேம்பாட்டு அறக்கட்டளை”யின் பரிசளிப்பு விழாவில் ஒரு லட்சம் ரூபாய் காசோலை மற்றும் பட்டயம் இந்த விருது வழங்கப்பட இருக்கிறது. சிறந்த வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான முனைவர் கா.அ.மணிக்குமாருக்கு தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் மாநில துணை தலைவர் ப.மாரிமுத்து உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

;