கோவை, செப்.8- கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில், ஒரே அறையில் இருவர் செல்லக்கூடிய புதுமை கழிவறை குறித்து மாநகராட்சி நிர்வாகம் நூதன விளக்கம் அளித்துள்ளது. கோவை மாநகராட்சி, 66 ஆவது வார்டுக்குட்பட்ட அம்மன்குளம் ராஜீவ் காந்தி நகரில் மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்கும் பொதுக்கழிப்பிடம் உள்ளது. ஆண்கள், பெண் கள் என தனித்தனியான கழிவறைகள் உள்ளது. இந்த பொதுக்கழிப்பிடத்தின் கழிப்பறையில் ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள் இரண்டிலும் ஒரே கழிவறை யினை இரண்டு பேர் அருகருகே அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த கழிவறைக்கு கதவு களும் இல்லாததால் அந்த கழிவறை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இரண்டு பேர் அருகருகே அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளதால் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது. தீக்கதிர் உள்ளிட்ட நாளிதழ்களிலும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் (பொ) மோ.ஷர்மிளா விடுத்துள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, மேற்கண்ட கழிப்பிடம் 1995 ஆம் ஆண்டு கட்டப் பட்டது.
இதில் ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக சிறுவர் களுக்கும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. சிறுவர் களுக்கான கழிப்பிடத்தில், சிறுவர்கள், பெரியவர்களின் கண்காணிப்பில் இக்கழிப்பிடத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், கதவுகள் இருந்தால் குழந்தை களால் உள்புறம் தாழிட்ட பின் திறந்து வெளியே வர இய லாது என்பதாலும் கதவுகள் பொருத்தப்படவில்லை. இக்கழிப்பிடத்தில் உள்ள பழுதுகளை நீக்கி, பராமரிப்பு செய்ய ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு, பணி நடைபெற்று வருகிறது. சிறுவர்கள் உபயோகப்படுத்த அமைக்கப்பட்ட கழிப்பிடம் உபயோகம் இல்லாமல் இருப்பதால் அவை களை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்ற ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சிறுவர் களுக்கான கழிப்பிடத்தை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. விரை வில் இப்பணி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த இரட்டை கழிப்பறை சமூக வலைத் தளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக மாநராட்சி நிர்வாகம் இரட்டை கழிவறையை மூடி, அதனை சிறுநீர் கழிப்பிடமாக மாற்றியுள்ளது குறிப்பி டத்தக்கது.