பொள்ளாச்சி, டிச.23- பொள்ளாச்சியை அடுத்த ஆழி யார் அணை பூங்கா முன்பு உள்ள நடைபாதை வியாபாரிகள் தங்க ளது வாழ்வாதாரத்தை முடக்கு வதை கண்டித்து கோட்டூர் பேரூ ராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து கோட்டூர் பேரூ ராட்சி செயல் அலுவலரிடம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட குழு உறுப்பினர் ஏ.துரைசாமி தலைமையில் வியா பாரிகள் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது, கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த கோட் டூர் பேரூராட்சிக்குட்பட்ட ஆழியார் பூங்கா முன்பு 45 ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்டோர் தள்ளுவண்டி மூலமாக மாங்காய்,நெல்லி,சர்பத், கம்மங்கூழ், பொம்மைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் உள்ளிட் டவை வியாபாரம் செய்து வருகி றோம். இதன்மூலமாகத்தான் எங்க ளது வாழ்வாதாரத்தை நடத்தி வரு கிறோம்.
மேலும், நடைபாதை வியாபா ரம் முறைபடுத்துதல் மற்றும் நடை பாதை வியாபாரிகள் பாதுகாப்பு சட்டம் 2014ன்படி கோட்டூர் பேரூ ராட்சி மூலமாக அனைவரும் அடை யாள அட்டைப் பெற்று வியாபா ரம் செய்து வருகிறோம். எங்களது வியாபாரத்தினால் போக்குவரத் திற்கோ அல்லது சுற்றுச்சூழ லிற்கோ, பொதுமக்களுக்கோ எவ் வித இடையூறுமின்றி வியாபாரம் செய்கின்றோம். இந்நிலையில் ஆழியார் சமமட் டக் கால்வாயின் பிரிவு பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் திடீரென நடைபாதை கடைகளை அகற்ற வேண்டுமென கெடு வைத் துள்ளார்.இதனால் எங்கள் வாழ்வா தாரம் கேள்விக்குறியாகி, எங்க ளது குடும்பங்கள் மிகவும் சிரமத்திற் குள்ளாகும். எனவே தமிழக அரசு நடைபாதை வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு எங்க ளது வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும். கோவை மாவட்ட நிர்வா கமும், கோட்டூர் பேரூராட்சியும் உட னடியாக நடவடிக்கை எடுத்து நடை பாதை வியாபாரிகளின் சட்டப்படி யான பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமென மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர். முன்னதாக, இந்த மனுவினை அளிக்கையில் விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் ஆனைமலை ஒன் றிய செயலாளர் பட்டீஸ்வரமூர்த்தி, ஆழியார் பூங்கா நடைபாதை வியா பாரிகள் சங்கத்தின் (சிஐடியு) செய லாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட திரா னானோர் கலந்து கொண்டனர்.