districts

img

ஆட்களை அனுப்பாததால் அதிருப்தி: குப்பை சேகரித்த கவுன்சிலர்

மேட்டுப்பாளையம், ஜூலை 26- மேட்டுப்பாளையம் நகராட்சிக் குட்பட்ட பகுதியில் 5 நாட்களாக குப்பை அள்ள ஆட்களை அனுப்பா ததால், அதிருப்தியடைந்த திமுக பெண் கவுன்சிலர், தனது மகன்களு டன் சேர்ந்து குப்பை அள்ளிய வீடியோ வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. கடந்த 5 நாட்க ளாக நகராட்சி பகுதியில் எங்கும் முறையாக  குப்பைகளை அகற்ற தூய்மை பணியாளர்களை நகராட்சி நிர்வாகம் அனுப்பவில்லை என கூறப் படுகிறது. மேட்டுப்பாளையம் நகர் மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த மெஹரீபாபர்வீன் என்பவரும், துணைத்தலைவராக அருள் வடிவு என்பவரும் பதவி வகித்து வருகின்ற னர். இந்நிலையில், நகராட்சிக்குட் பட்ட 11 வது வார்டில் திமுக நகர செய லாளர் முகமது யூனஸ் மனைவி ஜம் ரூத் பேகம் வார்டு உறுப்பினராக உள் ளார்.

இவர் மாவட்ட திட்டக்குழு உறுப் பினராகவும் உள்ளார். இவரது வார் டில் கழிவுநீர் கால்வாய் சீரமைத்தல், குடியிருப்புகளில் குப்பைகளை முறையாக  சேகரித்தல், சீரான குடி நீர் விநியோகம் வழங்குதல் உள் ளிட்ட பணிகளை செய்து தரக் கோரி  நகராட்சி நிர்வாகத்திடம் வார்டு உறுப் பினர் ஜம்ரூத்பேகம் பலமுறை வலியு றுத்தியதாக கூறப்படுகிறது. இதனி டையே இவரது வார்டில் கடந்த 5 நாட் களுக்கு மேலாக குப்பைகளை சேக ரிக்க தூய்மை பணியாளர்கள் வர வில்லை என்பதால் ஆங்காங்கே குப் பைகள் அகற்றப்படாமல் கிடந்ததாக தெரிகிறது. இது குறித்து வார்டு பகுதி யில் உள்ள மக்கள் இவரது வீட்டிற்கு  சென்று இவரிடம் முறையிட்டு வாக்கு வாதத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த ஜம்ரூத் பேகம், தனது இரு மகன்களை அழைத்து சென்று குடும்பத்தோடு வார்டு பகுதியில் தேங்கியிருந்த குப் பைகளை அப்புறப்படுத்தும் பணி யில் ஈடுபட்டார். ஒரு வார்டு உறுப் பினர் நகராட்சி நிர்வாகம் குப்பை களை எடுக்காததால் தனது மகன் களுடன் சேர்ந்து வீடு வீடாக சென்று வண்டியில் குப்பைகளை சேகரித் ததை பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங் களில் தற்போது வைரலாக்கி வரு கின்றனர். இந்த வீடியோ காட்சிகள் மேட்டுப்பாளையம் பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.