கோவை, டிச.21- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் கேர் டி அமைப்பின் சார்பில் கோவை மாவட்ட அளவிலான பஞ் சாலைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களின் பாது காப்பு மற்றும் தங்கும் விடுதிகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோவை வருவாய் கோட் டாட்சியர் இளங்கோ தலைமை வகித்தார். கேர் டி-யின் திட்ட ஒருங்கிணைப்பாளர் மா.மோத்திராஜ் வரவேற்றார். மாவட்ட சமூக மகளிர் உரிமைத்துறை அலுவலர் தங்கமணி, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநர் எம்.கலைமதி, கேர் டி இயக்குநர் சி.மா.பிரித்திவிராஜ், மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் பேராசிரியர் வெங்கடே சன், வழக்கறிஞர் எஸ். கிருஸ்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் கருத்துரையாற்றினர். இந்நிகழ்வில் கோவை மாவட்டத்திலுள்ள 26 பஞ்சாலை கள் சார்ந்த மேலாளர்கள் மற்றும் மனித வள மேம்பாட்டு அதி காரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட பெண்கள் பாதுகாப்பு அலுவலர் அருணா மற்றும் கேர் டி அமைப்பை சார்ந்த பஞ்சாலை பயிற்சியாளர்கள் வி.அஸ்வதி, டி. ஹரிஸா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில், பி. லீனா ஜஸ் டின் நன்றி கூறினார்.