districts

img

காவல் துறையை கண்டித்து குடும்பத்துடன் தர்ணா

தருமபுரி, செப்.19- நில ஆக்கிரமிப்பாளர் கள் மீது நடவடிக்கை எடுக் காததால் குடும்பத்துடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், நவலை கிராமத்தை சேர்ந்தவர் ரங்கீஸ்குமார் - ஸ்டெல்லா ஜீவாபாய் தம்பதி யினர். நவலைகிராமத்தில் இவர்களுக்கு சொந்தமான வீட்டு மனை இடத்தில் சிறு பிரியாணி கடை வைத்துள்ளனர். இதில்  கிடைக்கும் சிறு வருவாய் வைத்து குடும்பத்தை நடத்தி வரு கிறார். இதே கிராமத்தை சேர்ந்த நாகப்பன் என்பவர் இந்த  பிரியாணி கடை வைத்திருக்கும் இடத்தில் எங்களுக்கு வழி பாத்தியம் உள்ளது என மிரட்டி வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 9 ஆம் தேதியன்று கடைக்குள் நுழைந்து அங் குள்ள பொருட்களை நாகப்பன் சேதப்படுத்தினார். நியா யத்தை கேட்டதற்காக எனது குடும்பத்தை அடித்தனர். இது  குறித்து கம்பை நல்லூர் காவல்நிலையத்தில் புகார் மனு  கொடுக்கப்பட்டது. ஆனால், புகார் மனு மீது எந்த நடவடிக்கை யும் இல்லை மாறாக காவல்துறை எதிரிகளுக்கு ஆதரவாக உள்ளது. எங்களுக்கு எதிரிகள்  கொலைமிரட்டல் விடுக்கின் றனர்.  காவல்துறையில் எந்த நடவடிக்கையும் இல்லாததால் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ரங்கீஸ்குமார்- ஸ்டெல்லா ஜீவாபாய் தம்பதியினர் தனது கைகுழந்தை யோடு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை யடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மனுக் களை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளித்ததின் அடிப்படையில் எழுந்து சென்றனர்.

;