districts

img

நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க மேம்பாட்டுப் பணிகள்

திருப்பூர், ஜூன் 3- தமிழ்நாட்டின் 17ஆவது பறவைகள் சர ணாலயமாக திருப்பூர் நஞ்சராயன் குளத் தைக் கடந்த அண்டு தமிழக அரசு அறிவித்தது.  இந்நிலையில் நஞ்சராயன் குளத்தில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டம் கூலிபாளையம் அருகே சுமார் 440 ஏக்கர் பரப்பளவில் நஞ்ச ராயன் குளம் அமைந்துள்ளது. இதில், சுமார்  280 ஏக்கர் பரப்பளவில் மீன் பிடிப்பு பகுதி யாக நீர் நிறைந்து காணப்படுகிறது. இக் குளத்திற்கு உள்நாட்டு பறவைகள் மட்டுமல் லாது, ஏராளமான வெளிநாட்டு பறவைகளும் வந்து செல்கின்றன. குறிப்பாக பல்வேறு நாடுகளில் இருந்து இரை தேடவும், இனப் பெருக்கத்திற்காகவும், கடும் குளிரில் இருந்து தப்பிப்பதற்காக இந்தியாவின் பல  பகுதிகளுக்கு பறவைகள் வந்து செல்வது வழக்கம். அதைப் போலவே திருப்பூர் நஞ்ச ராயன் குளம் பகுதிக்கு ஏராளமான பறவை  இனங்கள் அக்டோபர், நவம்பர் மாதங்களில்  வரும். அப்படி வரும் பறவைகள் மார்ச் மாதம்  வரை இங்கு தங்கியிருக்கும். இதுவரை நஞ்ச ராயன் குளத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு பறவைகள் என 181 பறவை இனங் கள் வந்துள்ளன.  இப்படி பல்வேறு பறவை இனங்கள் வந்து  செல்லும் நஞ்சராயன் குளத்தில், பனியன் நிறு வனங்களில் இருந்து வெளியேறும் சாயக் கழிவுகள் கலந்து குளம் மாசு அடைகிறது. எனவே இதை பறவைகள் சரணாலயமாக அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்க ளும், இயற்கை ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் காலஞ்சென்ற முன்னாள் எம்எல்ஏ  கே.தங்கவேல் முதன்முதலில் சட்டமன்றத் தில் இக்கோரிக்கையை வலியுறுத்தினார். ஏற்கெனவே தமிழக அரசு 2015ஆம் ஆண்டு ரூ.4 கோடி மதிப்பீட்டில் நஞ்சராயன் குளத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து  குளத்தினை சீரமைக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட்டன. ஆனால் முந்தைய அதி முக அரசு நஞ்சராயன் குளத்தைப் பறவைகள்  சரணாலயமாக அமைக்க மறுத்துவிட்டது. இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன்  கட்ந்த 2022 ஆம் ஆண்டு இப்பகுதிமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கை  ஏற்று தமிழகத்தின் 17ஆவது பறவைகள் சர ணாலயமாக நஞ்சராயன் குளத்தை அறி வித்து தமிழக அரசு அரசாணை வெளியிட் டது. மேலும், பறவைகள் விளக்க மையம்  ஏற்படுத்தப்பட்டு, பறவைகள் சரணாலய பணிகளுக்காக ரூ.7.5 கோடி ஒதுக்கீடு செய் யப்படும் என்று வனத்துறை அமைச்சர் அறி வித்து இருந்தார். இந்நிலையில் ஞாயிறன்று நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தை மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார் ஆய்வு செய்துவிட்டு கூறியதாவது, மாநகரின் முக்கி யபகுதியில் நஞ்சராயன்குளம் பறவை கள் சரணாலயம் அமைந்துள்ளது. பொழு துபோக்கு அம்சம் கொண்ட இடங்கள் மாநக ரத்தை சுற்றி அதிக அளவில் இல்லை. தற் போது, ஆண்டிப்பாளையம் குளம் பகுதியில்  சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வரு கின்றன. இப்பணிகள் விரைவில் முடிக்கப் பட்டு படகு இல்லம் அமைக்கப்படவுள்ளது.  அதுபோல நஞ்சராயன் குளம் பகுதியி லும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், முதல்  கட்டமாக வனத்துறை சார்பில் ரூ.7.5 கோடி  மதிப்பில் திட்டக் கருத்துரு அரசுக்கு சமர்ப் பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துருவின் முன்னேற்றம், நிதி ஒதுக்கீடு மற்றும் நஞ்ச ராயன் குளம் பகுதியில் சுற்றுலாப் பயணி களை ஈர்க்கும் விதமாக புதிதாக மேற்கொள் ளப்பட வேண்டிய சுற்றுலா வளர்ச்சிப் பணி கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட் டது. இதில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்  வகையில் வணிக வளாகம், புத்துணர்வு மையம், சிறிய திறந்தவெளி அரங்கம், குழந் தைகள் பூங்கா உட்பட பல்வேறு சிறப்பம் சங்கள் இடம் பெறும். மேலும், சுற்றுலா மேம் பாட்டுப் பணிகள் செயல்படுத்தினால் உள் ளூர் பொதுமக்கள், பறவை ஆர்வலர்கள் மற் றும் திருப்பூர் மாவட்டத்துக்கு வருகை புரியும்  சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு சிறந்த சுற்று லாத் தலமாக நஞ்சராயன் குளம் அமையும்  என்றார்.

;