அமைச்சர் திறந்து வைத்தார் உதகை, ஜூலை 10- நீலகிரி மாவட்டத்தில், நகராட்சி நிர் வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (பேரூராட்சிகள் துறை) சார்பில் ரூ. 2.07 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். நீலகிரி மாவட்டம், கேத்தி தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட வளம் மீட்பு பூங்கா உள்ளது. இங்கு, 2022-2023 நிதி ஆண்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கெரடா - கெங்குந்தா சாலை, சிறப்புப்பகுதி மேம்பாட்டு திட் டத்தின் கீழ் ரூ.11.50 லட்சம் மதிப்பில் நேர்கம்பை மயானத்தில் கட்டி முடிக்கப் பட்ட நடைபாதையுடன் கூடிய கல் வெட்டு ஆகியவைகள் மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மேலும், தோடா காலனியில் சிறப்புப் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட நடை பாதை, முக்கட்டியில் சிறப்புப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட சாலை, சோலூர் முதல் நிலை பேரூராட்சி பகுதி யில் 2022-2023 நிதி ஆண்டில் சிறப்புப் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலை கடை, தூய்மை இந்தியா திட்டம் 2.0ன் கீழ் ரூ.17.20 லட்சம் மதிப்பில் நாகார் தனையில் கட்டப்பட்டுள்ள 10 இருக்கை கள் கொண்ட கழிப்பறை உள்ளிட்ட மொத்தம் ரூ.2.07 கோடி மதிப்பில் முடிக் கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணி களை சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் திங்களன்று திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட் சியர்கள் பூஷணகுமார், துரைசாமி, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் இப் ராகிம்ஷா, பேரூராட்சி செயல் அலுவ லர்கள் பி.நடராஜ் ஹர்ஷத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.