districts

வீடியோகால் ஆலோசனை பெற்று சிகிச்சை அளித்த பல் மருத்துவர்: சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை

திருப்பூர், ஜூலை 6 - திருப்பூரில் வீடியோ கால் மூலம் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளித்த பல்  டாக்டரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்  கொண்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கடும்  எச்சரிக்கை விடுத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் கிளினிக் மற்றும் மருந்தகங்களில் கடந்த 3 ஆம் தேதி சுகாதாரத் துறை அதிகாரி கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, திருப்பூர் சின்னக்கரை, லட்சுமி நகரில் செய் யப்பட்டு வந்த திவ்யா கிளினிக்கில் சோதனை  செய்தனர். இங்கு திவ்யா, சுசியா என சகோத ரிகள் டாக்டர்களாக உள்ளனர். எம்.பி.பி.எஸ்., முடித்த திவ்யா சென்னையில் தங்கியுள் ளார். பல் மருத்துவ படிப்பு (பி.டி.எஸ்.,) முடித்த சுசியா கிளினிக்கில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ஒன்பது  மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு மருத்து வம் பார்த்தபோது, சுசியா, மருத்துவக் குழு வினரிடம் பிடிபட்டார். இருவரையும் சுகாதார  துறை அதிகாரிகள் விசாரணைக்கு வர உத்தர விட்டனர்.  இந்நிலையில் திவ்யா, சுசியா இருவரும் மருத்துவத்துறை இணை இயக்குனர் அலு வலகத்தில் புதனன்று ஆஜராகினர். அப் போது சுசியா மகப்பேறு மருத்துவம் தொடர் பாக வீடியோ காலில் திவ்யாவிடம் பேசி,  நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்ததை ஒப்புக் கொண்டார். இதை தொடர்ந்து இருவ ரையும் மருத்துவத்துறை அதிகாரிகள் எச்சரித்து, மன்னிப்பு கடிதம் வாங்கி அனுப்பி  உள்ளனர். இது தொடர்பாக மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனர் கனகராணி கூறு கையில், திவ்யா எம்.பி.பி.எஸ்., முடித்துள் ளார்.  திருமணமாகி கடந்த சில மாதங்க ளாக சென்னையில் வசித்து வந்தார். மற்றொ ருவர் பி.டி.எஸ்., படிப்பு முடித்துள்ளனர். பொது மருத்துவம் தொடர்பாக வீடியோ கால்  மூலம் திவ்யாவிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை வழங்கியுள்ளார். மருத்துவ படிப்பு  முடிக்காமல், இருவரும் மருத்துவம் பார்த்தி ருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டி ருக்கும். மருத்துவ படிப்பு முடித்ததால், இது குறித்து மாவட்ட ஆட்சியர் கவனத் திற்கு கொண்டு சென்றோம். அவரின் அறிவு றுத்தலின்படி முதல் கட்டமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை இது போன்ற செயலில் ஈடுபட்டால், கடும் நடவ டிக்கை எடுக்கப்படும், என்றார்.

;