திருப்பூர், அக். 5 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் என்பதை மறைத்து, கட்சியிலிருந்து விலகி இந் திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்ததாக தினகரன் நாளிதழ் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டுள்ளது ஊடக அறம் ஆகாது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கூறியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத் துக்கண்ணன் செவ்வாய் கிழமை வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டு வந்த உடுமலை பகுதியை சார்ந்த சி.சுப்பிரமணியம், என்.கிருஷ் ணசாமி, பழனிசாமி, திருமலைசாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி உறுப்பி னர்கள் கட்சியின் அமைப்பு விதிக்கு மாறாகவும், கட்சியின் பெயருக்கு களங் கம் விளைவிக்கும் வகையிலும் செயல் பட்டதால் கடந்த செப்டம்பர் 27 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர். ஏற்கனவே கடந்த காலங்களில் தொழிற் சங்க, விவசாய தொழிலாளர்கள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து விடுபட்டவர் களை, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வர்கள் தங்களுடன் இணைத்துக் கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு அமைப்பில் இருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்ததாக தினகரன் பத் திரிக்கையில் அக்டோபர் 4 அன்று செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து சம்பந்தபட்ட பத்திரிக்கை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை யிடம் உண்மை நிலையை தெரிந்து செய்தி வெளியிட்டு இருக்க வேண்டும். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கொடுத்த உண்மைக்கு மாறான, தவ றான செய்தியை தினகரன் பத்திரிக்கை யில் பிரசுரம் செய்தது ஊடக அறமா காது. வெகுஜன அமைப்புகளில் உள்ள வர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக வும் இருக்கலாம் என அந்தந்த அமைப்பு களின் விதிகளில் தெளிவாக உள்ளது. எனவே உண்மை நிலைக்கு மாறாக எந்த விதமான உண்மைதன்மை அறியாமல் தினகரன் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டுள்ளது மிகவும் வருத்தத்திற் குரியது என்பதை தெரிவிப்பதுடன், இந்த மறுப்பு செய்தியை வெளியிடு மாறு கேட்டுக் கொள்வதாக கட்சியின் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண் ணன் கூறியுள்ளார்.