பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி களை விடுதலை செய்த குஜராத் பாஜக அரசை கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ் புலிகள் கட்சியின் மாநில பொறுப்பாளர் கோவை மார்க்ஸ், சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன், விசிக மாநகர் மாவட்ட பொருளாளர் காஜா மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.