தாராபுரம், ஜன,6- சாலைப்பராமரிப்பில் காலியாக உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களில் கிராமப்புற இளைஞர் களுக்கு பணி வழங்க வலியுறுத்தி, தமிழ் நாடு நெடுஞ்சாலை சாலைப்பணியாளர் சங்கத்தினர் தலையில் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு சங்கத்தின் கோட் டத் தலைவர் கே.வெங்கிடுசாமி தலை மையில் தலையில் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்தின்போது சாலைப்பணியாளர்க ளின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்து பணப்பலன்களை வழங்கவேண்டும். சாலைப்பணியாளர் களின் பணிநீக்க காலம் மற்றும் தற்போ தைய பணிக்காலத்தில் இறந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகள் விண்ணப் பம் செய்து காத்திருப்போருக்கு கருணை அடிப்படையில் விரைந்து பணி வழங்க வேண்டும். சாலைப்பராமரிப் பில் காலியாக உள்ள பத்தாயிரத் திற்கும் மேற்பட்ட பணியிடங்களில் கிரா மப்புற இளைஞர்களுக்கு சாலைப்ப ணியாளராக பணி வழங்கவேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பில் ஒட்டு மொத்த ஒப்பந்த நடைமுறை கைவிடப் படுவதாக அறிவித்திருந்தாலும், புதுப் பிக்கப்படும் நெடுஞ்சாலைகளை தனி யார் ஐந்து வருடம் பராமரிக்கும் நடை முறையை ரத்து செய்து, சாலை பராம ரிப்பு பணிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் ஆவேச முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆ.அம்ச ராஜ், மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிர மணியன், கோட்ட செயலாளர் இல. தில்லையப்பன், சங்க நிர்வாகிகள் வி. தங்கவேல், என்.சிவக்குமார், ஆர்.செல் வக்குமார் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்ட துணை தலைவர் எஸ். முருகதாஸ், வட்டக்கிளை தலைவர் கே. செந்தில்குமார், தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்க வட்டக்கிளை தலைவர் எம்.மேகலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்ட இணைச் செயலாளர் மணிமொழி நன்றி தெரிவித்தார்.