சேலம், டிச.20- மூலப்பொருட்களின் விலையேற் றத்தை உயர்த்திய ஒன்றிய பாஜக அர சைக் கண்டித்து சிறு, குறு தொழில் முனை வோர் சங்கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சிறு, குறு தொழிற்சாலைகளில் பயன் படுத்தக்கூடிய மூலப்பொருட்களின் விலை 100 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதனால், தொழிற்சாலை உரிமையாளர்கள் மட்டு மன்றி தொழிலாளர்களின் குடும்பங்களும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்படைந் துள்ளது. எனவே, இந்த விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும் என வலி யுறத்தி சிறு, குறு தொழில் முனைவோர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருநாள் கதவ டைப்பு போராட்டத்திற்கு அறைகூவல் விடுத் தது. அதன்படி, திங்களன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறு, குறு உற்பத்தியாளர் சங்க தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட திர ளானோர் கலந்து கொண்டனர். இதனால் சேலம் மாவட்டத்தில் இன்று ஒருநாள் மட் டும் சுமார் ரூ.10 கோடி அளவில் வர்த்த கம் பாதிக்கப்பட்டது. ஈரோடு இதேபோல், மூலப்பொருட்களின் விலை யேற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிறு, குறு தொழில் முனைவோர் சங்கங்களின் கூட்ட மைப்பினர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலத்தில் மனு அளித்தனர். இதில், கூட்ட மைப்பின் நிர்வாகிகள் திருமூர்த்தி, ஸ்ரீதா், சர வணபாபு, பழனிவேல், பிரகாஷ், ஜவுளி ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சிவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.