பள்ளிபாளையம், ஜன.27- மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உத வித்தொகை வழங்குவதை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாற்றுத்திறனா ளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் நிதியுத வியுடன் ரூ.500 சேர்த்து, ரூ.1500 வழங்கப் படும் என தமிழ்நாட்டு அரசு அறிவித்து, வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில், ஒரு சில மாற்றுத் திறனாளிகளுக்கு பழைய உதவித்தொ கையே வழங்கப்பட்டு வருகிறது. இதனை முறைப்படுத்தி அனைவருக்கும் அரசு அறி வித்தபடி ரூ.1500 மாத உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரு வாய் கோட்டாட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்ப்பு கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மாற்றுத் திறனாளிகள் வேண்டுமென குறைதீர்ப்பு கூட்டம் முறையாக நடத்த வலியுறுத்தி தமிழ் நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலசங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திற னாளிகள் சங்கத்தின் மாவட்ட அமைப்பா ளர் எம்.ஆர்.முருகேசன், மாவட்ட பொருளா ளர் ஏ.ரங்கசாமி, நிர்வாகிகள் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர். இதைத்தொ டர்ந்து கோட்டாட்சியர் நேர்முக உதவியாளரி டம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை சங் கத்தின் நிர்வாகிகள் வழங்கினர்.