திருப்பூர் ஜூலை 17 - சோமனூர் வட்டாரத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமை யாளர்கள், நவீன ரக விசைத்தறிகளை அமைப்பதற்கு ஒன்றிய அரசு 50 சதவிகி தம் மானியம் வழங்க வேண்டும் என்று விசைத்தறி உரிமையாளர்கள் வலியு றுத்தி உள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையா ளர்கள் சங்க வருடாந்திர பொதுக்குழு கூட்டம் திருப்பூர் சாமளாபுரம் அருகே கோம்பைக்காடு புதூரில் உள்ள தனி யார் மண்டபத்தில் ஞாயிறு அன்று நடை பெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் சி. பழனிச்சாமி கடந்த பிப்ரவரி மாதம் மறைந்ததை தொடர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சங்கத்தின் தலைவராக பி. குமார சாமி, துணைத் தலைவராக கே.ஈஸ்வ ரன், செயலாளராக பி.கோபால கிருஷ்ணன், துணைச் செயலாளர்க ளாக எம்.வெற்றிவேல், எம்.வேலுச் சாமி, எம்.சதீஷ்குமார் பொருளாளராக ச.ஈ.பூபதி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். இக்கூட்டத்தில், விசைத்தறி விலை யில்லா மின் பயன்பாட்டு அளவை 1000 யூனிட்டாக உயர்த்தியதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மின் கட்டண உயர்வை மூன்று ஸ்லாப் வாரியாக அறிவித்ததை 70 பைசா என ஒரே ஸ்லாப்பாக மட்டும் உயர்த்திக் கொள்ளவும், வட்டி அபராதம் இல்லா மல் மின் கட்டணம் செலுத்தவும், தமிழக முதல்வருக்கு தனித்தனியாக உறுப்பி னர்கள் கோரிக்கை கடிதம் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.
சோமனூர் பகுதியில் 2.5 லட்சம் விசைத்தறி உரிமையாளர்கள் வாழ்வா தாரம் பாதுகாக்கும் பொருட்டு ஜவுளி சந்தை அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரி வருகிறோம். தமிழ்நாடு அரசு ஜவுளி சந்தை அமைப் பதற்கு கருத்துரு கேட்டிருக்கிறது. எனவே போர்க்கால அடிப்படையில் இங்கு ஜவுளி சந்தை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கி றோம்.பழைய சாதா ரக விசைத்தறி களை மாற்றி நவீன விசைத்தறிகளை அமைப்பதற்கு விசைத்தறியாளர் ஒரு வருக்கு எட்டு விசைத்தறி வீதம் தலா 50 சதவிகித மானியம் மத்திய அரசு வழங்க வேண்டும். அத்துடன் 50 சதவிகித மானி யத்துடன் சூரிய ஒளி மின் தகடுகள் வழங்க வேண்டும்.விசைத்தறியாளர் களின் மின் கட்டண சுமையை குறைப்ப தற்கு சூரிய ஒளி மின் தகடுகள் அமைப் பதற்கு மாநில அரசு 25 சதவீதம் மானி யம் வழங்க வேண்டும். ஆண்டுக்கு 6 சதவீத மின் கட்டண உயர்வு என்ற முடிவை மாநில அரசு கைவிட வேண் டும். ஜவுளி சந்தை, மின் கட்டண உயர்வை கைவிடுவது, சூரிய மின் உற் பத்தி தகடுகள் மானிய விலையில் தரு வது ஆகிய கோரிக்கைகளை வலி யுறுத்தி தனித்தனி உறுப்பினர்கள் மத் திய மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப் புவது என்றும் இப்பொது குழுவில் தீர் மானிக்கப்பட்டது.