districts

img

இளம்பெண்களை ஏமாற்றி திருமணம்

கோவை, செப்.10- பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக கொங்கு இளைஞர் எழுச்சி பேரவை அமைப்பை சேர்ந்த நபர் மீது  கோவையில் இரண்டு இளம்பெண்கள் புகார ளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. திருவாரூரை சேர்ந்த தீபா மற்றும் நாமக் கல்லைச் சேர்ந்த உமா ஆகிய இரண்டு பெண்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித் தனர். அதில், கரூர் மாவட்டம், பரமத்தியை அடுத்த நல்லிபாளையம் பகுதியை சேர்ந்த கருணாநிதி - நிர்மலா தம்பதியரின் மகன் பார்த்திபன். இவர் தான் தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருவதாகவும், கொங்கு இளைஞர் எழுச்சி பேரவை என்ற அமைப்பில் நிர்வாகியாக பணியாற்றி வரு வதாகவும் கூறி பல இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடு பட்டுள்ளார். மேலும், சிறுமிகளை கூட ஏமாற்றி பாலியல் வன்புறுத்தலுக்கு உள்ளா கியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு 17 வயதே  நிரம்பிய தீபா என்ற தன்னை பொள்ளாச்சி யில் வைத்து திரைப்படம் எடுப்பதற்காக நேர் காணல் செயதார். அப்போது தனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட துடன், மயக்கம் தெளிந்ததும் தனது காலில்  விழுந்து மன்னிப்பு கேட்டு திருமணம் செய்து  கொள்வதாகக்கூறி, கடந்த ஏப்ரல் மாதம் வரை கோவைபுதூர் பகுதியில் தங்க வைத் தார். திடீரென சில நாட்கள் ஊருக்கு செல்வ தாக கூறி சென்ற பார்த்திபன் வீடு திரும்பாத தால் அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது வேறு ஒரு பெண் அழைப்பை எடுத்து தான் பார்த்திபனின் மனைவி  என்று கூறினார்.  மேலும், தன்னை கேவலமான வார்த்தை களால் திட்டினார். விசாரித்தபோது,  ஏற்கனவே பல பெண்களை இதேபோன்று  ஏமாற்றியது தெரியவந்தது.

பார்த்திபனின்  மோசடிக்கு அவரது தாய் மற்றும் தந்தை உடந்தையாக இருந்து பாதிக்கப்பட்ட பெண் களிடம் “நீ தான் என் மருமகள்” என ஆசை  வார்த்தையால் பேசியதாகவும் குறிப்பிட் டார். இதேபோல் நாமக்கல்லை சேர்ந்த உமா  என்ற பெண்ணை கடந்த 2020 ஆம் ஆண்டு  திருமணம் செய்துள்ளார். கோவை வட வள்ளியை அடுத்த வேடப்பட்டி பகுதியில்  தன்னுடன் வசித்து வந்த பார்த்திபன் அவ்வப் போது வீட்டிற்கு வருவதும், பின்னர் பணி நிமித்தமாக வெளியூர் செல்வதாக கூறி செல் வதும் வழக்கமாக வைத்திருந்தார். ஆனால்,  கடந்த ஓராண்டாக எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில், தான் அவரை பற்றி விசாரித்தபோது அவரது மடிக்கணினி மற்றும்  சமூக வலைதள பக்கம் ஆகிவற்றில் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது.  இதுகுறித்து காவல் நிலையத்தில்  புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பார்த்திபனுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதன் காரண மாகவே தங்களுக்கான நியாயம் கிடைக்க வில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.

;