திருப்பூர், ஜூன் 19 - தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் அலு வலகம் முன்பாக, புதனன்று தண்டோரா முழக்கப் போராட்டம் தமிழ்நாடு நெடுஞ் சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதன் மூலம் 3500க்கும் மேற் பட்ட சாலைப் பணியாளர்கள், சாலை ஆய்வாளர் பணியிடங்கள் ஒழிக்கப்ப டும் அபாயம் உள்ளது. சுங்கச்சாவடி அமைத்து தனியார் மூலம் சுங்க வரி வசூ லிக்க அனுமதிக்க கூடாது. எனவே மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். கிராமப்புற இளை ஞர்களுக்கு நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளில் வேலை வழங்கிட வேண் டும். நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு என்று சொல்லி நிரந்தர பணியிடங்களை ஒழிக்க கூடாது, ஓய்வு பெற்ற ஊழி யர்களைக் கொண்டு பணிகளை மேற் கொள்ளக் கூடாது, இளைஞர்கள் வேலைவாய்ப்பை பறிக்கக்கூடாது. சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப் படுத்தி ஆணை வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தண்டோரா அடித்து கோரிக்கை முழக் கம் எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் திருப்பூர், தாராபுரம், கரூர், ஈரோடு கோட்டங் களை சேர்ந்தோர் பங்கேற்றனர். இதில் கோட்டத் தலைவர்கள் கே.வெங்கிடு சாமி, ஆர்.கருப்பன், கே.செவந்தி லிங்கம், எம்.ஆர்.செங்கோட்டையன் ஆகியோர் தலைமை ஏற்றனர். தாராபு ரம் கோட்டப் பொருளாளர் எஸ்.முருக சாமி வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எ.ராணி தொடக்கி வைத்தார். கோட்டச் செயலாளர்கள் எல்.பாலசுப்பிரணி, எல்.தில்லையப் பன், ஆர்.ராமன், சு.ராஜேந்திரன் ஆகி யோர் விளக்கவுரை ஆற்றினர். மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரமணியன் நிறைவுரை ஆற்றினார். கோட்ட இணைச் செயலாளர் பி.விஸ்வநாதன் நன்றி கூறினார்.