districts

img

கனமழையால் நிரம்பி வழியும் தடுப்பணைகள்!

சேலம், மே 20- சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் அப்பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி காணப்படு கின்றன. இதனால் அப்பகுதி விவ சாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூர் மற் றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிக ளில் ஞாயிறன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப் பட்டது. பிற்பகலில் வானில் கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக சாலை களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி யது. கடந்த இரண்டு நாட்களாக ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிக ளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ராமநாயக்கன்பாளை யம், கல்பகனூர், தென்னங்குடிபா ளையம் பகுதிகளைச் சேர்ந்த விவ சாய நிலங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. வாழப்பாடி அருகிலுள்ள கோதுமலை வனப் பகுதி மற்றும் சுற்றுப்புறக் கிராமங் களில் இரு தினங்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில், ஞாயிறன்று மாலை திடீரென மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இத னால், கோதுமலை வனப்பகுதியி லுள்ள சிறு நீரோடைகளில் மழை நீர் வழிந்தோடி, கிராம வனக்குழு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள, 10  தடுப்பணைகளும் நிரம்பி வழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விளைநிலங்களிலும் குளம்போல மழைநீர் தேங்கியது.

கனமழையின் போது கோட் டையூர் - பண்ணவாடி பரிசல் துறைகளுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த செட் டிப்பட்டியைச் சேர்ந்த குப்பு சாமி மனைவி சுந்தரி (37) என்ப வர் மின்னல் தாக்கி உயிரி ழந்தார்.