அந்தியூர், டிச.7- அந்தியூர் அருகே குடியிருப்பு களுக்குள் புகுந்த ஏரி நீரால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட் டம், வேம்பத்தி கிராமம், தோட்டக் குடியாம் பாளையத்தில் வேம்பத்தி ஏரி அமைந்துள்ளது. தற்போது வேம்பத்தி ஏரிக்கு அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஏரி எந்த நேரமும் அதன் முழு கொள்ளவை எட்டி, உபரி நீர் வெளியேறும் நிலையில் உள்ளது. இந்நிலையில் ஏரியின் வடக்கு புறம் ஒட்டியவாறு 10 குடுப்பங்கள் சொந்த வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பட்டியலின மக்கள் ஆவர். தற்போது இவர்களின் வீடுகளுக்குள் ஏரி தண்ணீர் புகுந்து நிற்பதால், இந்த மக்களே வீடுகளை விட்டு வெளியேறி, அருகில் உள்ள தோட்டக்குடியாம் பாளையம் அரசுப் பள்ளி வகுப்பறையில் தங்கியுள்ள னர். இதனால் குழந்தைகளும், பெண் களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா அந்தியூர் செயலாளர் ஆர்.முருகேசன், மாவட் டக்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரி முத்து, தாலுகா கமிட்டி உறுப்பினர் கள் ஆர்.மாரியப்பன், எஸ்.செபாஸ்டி யன், எஸ்.துரைசாமி மற்றும் உள்ளூர் நிர்வாகி எஸ்.மாதன் ஆகி யோர் பாதிக்கப்பட்ட மக்களின் வீடு களை நேரில் பார்வையிட்டனர். இதன் பின், அம்மக்களை சந்தித்து விவ ரங்களை கேட்டறிந்தனர். இதைத் தொடர்ந்து உடனடியாக இம்மக்க ளுக்கு மாற்று இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அந்தியூர் வட்டாட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.