திருப்பூர், டிச. 23- திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்திற்கு உட் பட்ட ரங்கநாதபுரம் பகுதியில் கொடிக்கம்பம் சாலை மற்றும் என்.ஆர்.கே. புரம் சாலையை சீரமைக்க வேண்டும் என்று மண்டல தலைவரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரங்கநாதபுரம் கிளை செயலாளர் சி.ராமசாமி தலைமையில் அப்பகுதி கட்சி அணி யினர், வடக்கு மாநகர குழு உறுப்பினர் ஆர்.நந்தகோபால் ஆகியோர் வெள்ளிக்கிழமை இரண்டாவது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: திருப்பூர் கொங்கு மெயின் ரோடு ரங்கநாதபுரம் தங்கம் மெடிக்கல் முன்பிருந்து கொடிக்கம்பம் சாலை வரையிலும், வடக்கில் கொடிக்கம்பம் சாலையில் இருந்து, தெற்கே என்.ஆர்.கே.புரம் சாலை முழுமையும் குண்டும், குழியுமாக படுமோச மாக சீர்குலைந்து உள்ளது. இந்த சாலையில் ஏராளமான பள்ளி வாகனங்கள், கனரக வாகனங்கள் வந்து செல்கிறது. அத்துடன் பொதுமக்கள் பயன்பாடும் மிக அதிகளவில் உள்ள பகுதியாகும். இருப் பினும், இச்சாலை பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் படு மோசமாக உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரங்கநாதபுரம் கிளை சார்பில் கேட்டுக்கொண்டனர்.