districts

img

திரிபுராவில் பாஜக காட்டுமிராண்டித்தனம்: திருப்பூரில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மார்ச் 7- திரிபுராவில் சட்டமன்றத் தேர்தலில்  மிகக்குறைந்த அளவு பெரும்பான்மை யுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி, ஆத் திரத்தின் உச்சத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியி னரைக் குறி வைத்து கொலை வெறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  பாரதிய ஜனதா கட்சியினரின் காட்டு மிராண்டித்தனமான இந்த தாக்குத லைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் திருப்பூரில் கோபா வேச கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். செவ்வாயன்று திருப்பூர் மாநக ராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன் தலைமை ஏற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செய லாளர் செ.முத்துகண்ணன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் கே.உண் ணிகிருஷ்ணன், டி.ஜெயபால், மாவட்ட குழு உறுப்பினர் பா.லட்சுமி ஆகியோர்  கண்டன உரையாற்றினர். இதில் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ் உட்பட கட்சி அணியினர் திரளா னோர் பங்கேற்று கண்டனம் முழங்கி னர்.