தருமபுரி, பிப்.25- ஊழல் முறைகேடுகளில் ஈடு பட்டு, விவசாயிகளை வஞ்சித்து வரும் அரூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங் கத்தின் செயலாளராக நீண்ட கால மாக பணிபுரிந்து வரும் எஸ்.விஜய குமார், கடந்த சில மாதங்களாக கீழ் மொரப்பூர் தொடக்க வேளாண் கூட் டுறவு சங்க செயலாளராகவும், கூடு தல் பொறுப்பு வகித்து வருகிறார். இவ்விரண்டு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயி களுக்கு பயிர்க்கடன் வழங்குவ தற்கு ஆயிரக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்று வருவதாகவும், லஞ் சம் தர இயலாத விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தருவதில்லை என்றும் விவசாயிகள் புகார் கூறுகின்றனர். தனக்கு வேண்டியவர்களுக்கு உடனே கடன் தருவதும், பிற விவசாயிகளை அலைக்கழிப்பதும் தொடருகிறது. கிராமப்புற ஏழை, எளிய விவசாயிகளை தரக்குறை வாகப் பேசி அவமரியாதை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பயிர்க்கடன் கேட்டு கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு வருவதற்கு விவசாயிகள் அச்சப் படுகின்றனர். மக்கள் சேவகனாக விளங்க வேண்டிய கூட்டுறவு சங்க செயலாளர், பொதுமக்கள் விரோதி யாகச் செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன் றவர்களால் கூட்டுறவுத் துறையின் மீது நம்பிக்கை இழந்து, கடன் வாங்குவதற்கு தனியார் நிறுவனங் களை விவசாயிகள் நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் எஸ்.விஜயகுமாரின் முறைகேடுகள் மீது விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். அரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் ஒன் றியச் செயலாளர் பி.குமார் தலைமை வகித்தார். இதில் மாநிலக்குழு உறுப் பினர் ஏ.குமார், மாவட்டச் செயலா ளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா, மொரப்பூர் ஒன்றியச் செயலாளர் கே.தங்கராஜ், மாவட்டக்குழு உறுப் பினர்கள் எஸ்.கே.கோவிந்தன், ஏ. நேரு, கே.என்.ஏழுமலை, சி.பழனி, வி.ஜெயகாந்தன், தமிழ்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.