சேலம், செப்.5- சாயப்பட்டறை கழிவுநீர் ஓடையில் கலப்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதை முறையிட்டும் தடுக்காத, ஜலகண்டாபுரம் பேரூராட்சியின் நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் பேரூராட்சி பகுதியில் எண்ணற்ற சாயப் பட்டறைகளின் கழிவுநீர் அங்குள்ள ஓடையில் கலக்கிறது. இதனால் நிலத் தடி நீர் மாசடையும் ஆபத்து உள்ளது. பொதுமக்கள், விவசாயம் அனைத்தும் பாழ்படுத்தும் இத்தகைய செயல்களை தடுத்த நிறுத்த வேண்டும் என தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி முறை யிட்டு வருகிறது. ஆனால் இப்பேரூ ராட்சி தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஜலகண்டாபுரம் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் இப்பகுதியில் செயல்படும் சாயப் பட்டறை முதலாளிகள் கழிவுநீரை சுத் திகரிப்பு செய்யாமல் தொடர்ச்சியாக ஓடைகளுக்குள் விடுவதால் பொதுமக் கள் பெரிய அளவில் பாதிப்பு அடைந் துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண் டும். சாயப்பட்டறை கழிவுநீரை சுத்தி கரித்து வெளியேற்ற வேண்டும். பேரூ ராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள குப்பை களை அகற்றி, சுகாதார நடவடிக்கை களை தீவிரப்படுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜலகண்டாபுரம் பேரூராட்சி அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றி யக்குழு உறுப்பினர் ஆர்.கோவிந்த ராஜ் தலைமை வகித்தார். இதில், கட்சி யின் மாவட்ட செயலாளர் மேவை.சண் முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப் பினர் எம்.குணசேகரன், மாவட்டக்குழு உறுப்பினர் ராஜாத்தி, ஜி.கவிதா உட் பட திரளானோர் கலந்து கொண்டனர்.