நாமக்கல், டிச.20- பள்ளிபாளையம் நகராட்சியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக் குட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் தினசரி குடிநீர் விநியோ கம் செய்ய வேண்டும். சுடுகாடு பகுதியில் உள்ள கழிப்பிடத்தில் உடைந்த கதவுகள், மின்விளக்குகள் உட்பட கட்டுமானப் பணிகள் உடனடியாக சரிசெய்ய வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண் டும். தரமில்லாமல் போடப்பட்டு சேதமடைந்த தார்ச்சா லைகளை சரி செய்ய வேண்டும். வாரத்திற்கு இரு முறை கொசுமருந்து அடிக்க வேண்டும். காவிரி ஆற்றில் சாக்கடை, சாயக்கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பள்ளிபாளையம் நக ராட்சி அலுவலகம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கிளைச் செய லாளர் என். சந்திரசேகரன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், மாவட் டக்குழு உறுப்பினர் கே.மோகன், ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி மற்றும் கிளைச் செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.