districts

பாரதியார் நினைவு நாளில் திறக்கப்படாத கதவு

திருப்பூர், செப். 11 - மகாகவி பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அவரது சிலைக்கு நினைவு அஞ்சலி செலுத்த அவி நாசி மேல்நிலைப் பள்ளி வளாகத் திற்கு எழுத்தாளர்கள் சென்ற போது, அந்த வளாகக் கதவு திறக் காமல் பூட்டப்பட்டிருந்தது குறித்து  மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் மாவட்ட ஆட்சியருக்கு  கடிதம் எழுதியுள்ளார். குறிப்பாக, சுதந்திர தினத்தின்  பவள விழா ஆண்டைக் கொண் டாடிக் கொண்டிருக்கும்போது, சுதந்திரத்திற்காக போராடிய முன் னோர்களை நினைவு கூர்ந்து அவர் களது பணிகளை அறியச் செய்வது  அவசியம். ஆனால் பாரதியார் நினைவு தினத்தில் அவருக்கு குறைந்தபட்சம் அஞ்சலி செலுத்தக்  கூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை  எடுக்காதது பல தரப்பினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது.  இந்த சூழலில் மார்க்சிஸ்ட்  கட்சியின் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் ஞாயிற்றுக் கிழமை திருப்பூர் மாவட்ட ஆட்சிய ருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  இந்திய விடுதலைப் போரில் தனது அக்கினி வரிகளாலும், சொல் லாலும், செயலாலும் உறங்கி கிடந்த மனிதர்களை தட்டி எழுப்பிய   மகாகவி பாரதியார் நினைவு தினம்  செப்டம்பர் 11. அன்றைய தினம் பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அரசு மேல்நிலைப் பள்ளி வளா கத்தில் மகாகவி பாரதியார் சிலை  நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு ஆண்டுதோறும் கவிஞர்கள், எழுத்தாளர்கள்,  பத்தி ரிகையாளர்கள் என பலதரப்பினர் அங்கு சென்று அஞ்சலி செலுத் துவது வழக்கம். இந்த ஆண்டு மகாகவி பாரதி யாருக்கு அஞ்சலி செலுத்த பள்ளி  வளாகத்திற்கு செல்லும் போது கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. மறுபுறம் உள்ள  சிறிய கதவு மட்டுமே திறக்கப்பட்டு  இருந்தது. இதன் வழியாகச் சென்று  பலரும் பாரதியார்  சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி  மரியாதை செலுத்த அனுமதிக் கப்பட்டனர். இது கடும் அதிருப் தியை உருவாக்கியுள்ளது.  எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை மூலம்   பாரதியார் நினைவு தினத்தை கடைப்பிடிக்க வேண்டும். தற் போதுள்ள அவிநாசி பள்ளியின் பாரதியார் சிலை மண்டபத்தை புதுப்பிக்க வேண்டும். இது குறித்து  மாவட்ட ஆட்சியர் கவனம் செலுத்தி  நடவடிக்கை எடுக்க வேண்டும்  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செ.முத்துக்கண்ணன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.  

;