தருமபுரி, செப்.3- குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் செல்லம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், சங்கிலிவாடி கிராமத்திற்கு ஒகேனக்கல் குடிநீரை செல்லம்பட்டி ஊராட்சி மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் சங்கிலிவாடி கிராம மக்களுக்கு வேலை வழங்க வேண்டும்.சங்கிலிவாடி பேருந்து நிறுத்தம் முதல் கனவாய்குட்டை வரை உள்ள பழுதடைந்த சாலையை சீர் செய்ய வேண்டும். பொதுசுகாதார கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு அமைத்து தரவேண்டும். மின் விநியோகத்தை சீர் செய்ய வேண்டும். கோணம்பட்டி, காவப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். இந்த காத்திருப்பு போராட் டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கிளை செயலாளர் ஏ.நீலமேகம், வார்டு உறுப்பினர் வசந்தா ஆகியோர் தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா, ஒன்றிய செயலாளர் பி.குமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.கோவிந்தன், கே.என்.ஏழுமலை ஏ.நேரு, பி.வி.மாது, தனலட்சுமி சி.பழனி ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி பேசினர். அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட பொரு ளாளர் இ.கே.முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீரபத்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமாரி, செல் லம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் கரு ணாநிதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒருவாரத்திற் குள் கோரிக்கைகளை நிறைவேற்றுவ தாக உறுதியளித்தனர். இதனை யடுத்து போராட்டத்தை தற்காலிக மாக ஒத்திவைத்தனர்.