districts

img

குடிநீர் இணைப்புக்கு கட்டாய வசூல்

சேலம், செப்.27- குடிநீர் இணைப்புக்கு கட்டாய வசூல் செய்யும் பாப்பம்பாடி பஞ்சா யத்து நிர்வாகத்தை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட  பாப்பம்பாடி பஞ் சாயத்தில் ஜேஜெஎம் குடிநீர் இணைப் புக்கு ரூ.2600 கட்டாயப்படுத்தி வசூலிக் கிறது. ஒன்றிய அரசால் செயல்படுத் தப்படும் ஜேஜெம் திட்டம் குடிநீர் இணைப்பு கொடுக்கும் போது இலவசம் என்று சொல்லி, தற்போது இணைப்பு வழங்கிய பிறகு கட்டாயமாக ரூ.2 ஆயி ரத்து 600 வழங்க வேண்டும் என நிர்பந் திக்கப்படுகின்றனர். சேலம் மாவட்டம், பாப்பம்பட்டி பஞ்சாயத்து தலைவர் தொடர்ச்சியாக வசூலில் ஈடுபட்டு வரு கிறார். வைப்புத்தொகையாக ரூ.500 முதல் ரூ.1000 வரை வாங்க வேண்டும்  என்றும் கூறப்படுகிறது. பாப்பம்பாடி பஞ்சாயத்து நிர்வாகம் மட்டும் இவ்வ ளவு பெரிய தொகை வசூலிப்பது கொள்ளை அடிப்பது போல் உள்ளது. மேலும், பாப்பம்பாடி பகுதி மக்கள்  வீட்டு வரி ரசீது, ஏரி வேலை அட்டை கேட்கும்போது ரூ.2 ஆயிரத்து 600 கட்டி னால் தான் அந்த ரசீதுகளை கொடுப் பேன் என்று ஊராட்சி செயலாளர் சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ஜேஜேஎம் திட்டத்தில் அடாவடியாக வசூல் செய்யும் பஞ்சா யத்து நிர்வாகத்தை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செக்கு மேடு கிளை செயலாளர் எஸ்.பச்சமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாவட்டச் செயலாளர்  மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே. சேகர், கொங்கணாபுரம் ஒன்றிய  செயலாளர் எஸ்.முத்துசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் மு.பெரியண்ணன் உட்பட திரளான பொதுமக்கள் கலந்து  கொண்டனர்.

;