தாராபுரம், செப்.21- தாராபுரத்தில் இருந்து சென் னைக்கு மீண்டும் பேருந்து சேவையை தொடங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள் ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாராபுரம் தாலூக்கா செயலாளர் என்.கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தாராபுரத்தில் இருந்து கடந்த 20 வரு டங்களுக்கு முன்பு தாராபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சென் னைக்கு தினசரி இரவு 8 மணிக்கு பேருந்து செல்லும், அதே போன்று சென்னை பாரிஸ் கார்னரில் இருந்து இரவு 8 மணிக்கு பேருந்து தாராபு ரம் புறப்பட்டு வரும். சுமார் 17 வருடங் களுக்கு மேலாக இயங்கி வந்த அரசு கழகப் பேருந்து சேவை கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தின் போது நிறுத்தப் பட்டது. கொரோனா தடை காலத் திற்கு பிறகு மீண்டும் பேருந்து சேவை இயக்கப்படும் என்று எண்ணி இருந்த நிலையில், அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. இது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற் படுத்தி வருகிறது. கடந்த காலங்க ளில் சென்னைக்கு செல்ல போதிய அளவு பயணிகள் வராத சூழ்நிலையி லும் கூட தினசரி பேருந்து இயக்கப் பட்டு வந்தது. ஆனால் தற்சமயம் சென்னை செல்ல ஏராளமான பய ணிகள் இருந்தும் அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தனியார் பேருந்துகளில் அநியாய கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தாராபுரத்தில் இருந்து மட் டும் தனியார் பேருந்து சேவைகள் தின சரி இரவு 3 பேருந்துகளும், பொள் ளாச்சியில் இருந்து தாராபுரம் வழி யாக ஒரு பேருந்து என மொத்தம் 4 பேருந்துகள் இயக்கப்பட்டு வரு கிறது. இந்த தனியார் பேருந்துகளில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ரூ.600 முதல் ரூ.1000 வரை வசூலிக்கின்றனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று மடங்கு நான்கு மடங்கு கட்டணங் கள் அதிகப்படுத்தி ரூ.2400 வரை வசூ லிக்கப்படுகிறது. இதனால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர். அரசு பேருந்து சேவை இருந்தால் நியாயமான கட்டணத்தில் பண்டிகை நாட்கள் உள்ளிட்ட எல்லா நாட்களிலும் கட்டண வேறுபாடின்றி பயணிக்கலாம். மேலும் அரசு பேருந்து குறைந்த அளவு பயணிகள் இருந்தாலும் கூட மக்களுக்காக இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தனியார் ஆம்னி பேருந்துகளில் குறைந்த அளவு பயணிகள் இருந் தால் பேருந்து ட்ரிப்பை கேன்சல் செய்து விடுகின்றனர். எனவே பொது மக்களின் நலன் கருதி உடனடியாக தாராபுரத்தில் இருந்து சென்னைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்து சேவையை மீண்டும் தொடங்கவேண்டும் என்று கூறப்பட் டுள்ளது.