ஈரோடு, டிச.15- ஈரோடு மாநகராட்சியில் பாதா ளச் சாக்கடை இணைப்பிற்கு ஒப் பந்ததார்கள் கட்டணம் வசூலிப் பதை தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள் ளது- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஈரோடு மாவட்ட 12 ஆம் மாநாடு புதனன்று ஈரோட்டில் துவங்கியது. செங்கொடியினை மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.துரைராஜ் ஏற்றி வைத்தார். மாநில செயற்குழு உறுப் பினர் எஸ்.நூர்முகமது மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் அறிக்கையை முன்வைத்து பேசி னார். இதைத்தொடர்ந்து மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள் அறிக்கை யின் மீது விவாதித்தனர்.
தீர்மானங்கள்
இம்மாநாட்டில், ஈரோடு மாநக ராட்சியில் பாதாளச் சாக்கடை இணைப்பிற்கு ஒப்பந்ததாரர்கள் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்களி டம் வசூலித்த கட்டணத்தை திருப்பி தர வேண்டும். பழுதடைந்த சாலை களை செப்பனிட வேண்டும். ஈரோடு ரயில் நிலையம் அருகில் கொல்லம் பாளையம் ஈரோடு நகரை இணைக் கும் ரயில்வே நுழைவு பாலம் பகுதி யில் தற்போது வாகன நெருக்கடி யாக இருக்கிறது. எனவே, அந்த இடத்தில் மேம்பாலம் கட்ட வேண் டும். தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். இத்தகைய நாய்களை மாநகராட்சி நிர்வாகம் பிடித்து பராமரிக்க வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மாநாட்டின் முதல் நிகழ்வாய் செந்தொண்டர் அணி வகுப்பும், கடம்பூர் ஏ.எம்.காதர் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி யும் நடைபெற்றது. இம்மாநாடு வியா ழனன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெறவுள்ளது.