திருப்பூர், மே 31- சமத்துவபுரத்தில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப் பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் பயன் பாட்டிற்குக் கொண்டு வர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிக மக்கள் தொகை நிறைந்த சமத்துவபுரத்தில் ஆரம்ப சுகாதார கட்டடம் கட்டி பல ஆண்டுகள் கிடப்பில் உள் ளது. இதை உடனடியாக சரி செய்து செய்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நியூ நெருப்பெரிச்சல் பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டத்தை விரிவு படுத்த வேண் டும். அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் குடிநீர், வீட்டு வரி, ரேசன் கடை, மருத்துவ உதவி மையம் உள்ளிட்டு அடிப் படை பிரச்சனைகளை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமத்துவபுரம் கிளை சார் பில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டதிற்கு கிளை செய லாளர் மா.தனராஜ் தலைமை ஏற்றார். மாவட்ட செயற்குழு எஸ்.சுப்பிரமணியம், கட்டுமான சங்க மாவட்ட குழு உறுப்பி னர் சி.ராஜன், ஒன்றிய குழு என். இளங்கோ, பி.மகாலிங்கம், சிறுபான்மை நலக் குழு நிர்வாகி இ.பிரான்சிஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். வாலிபர் சங்க நிர்வாகி பி.முத்து குமார் நன்றி கூறினார்.