districts

img

அரசு பள்ளி மூடும் அபாயம் - மாணவர் சேர்க்கையை அதிகரிக்க சிபிஎம் கோரிக்கை

அவிநாசி,மே 16- அவிநாசி அருகே மோர்பம்பாளை யம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மூடும் அபாய நிலை உருவாகி யுள்ளதால், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கருவலூர் கிளை விடுத்துள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம் உப்பிலி பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, மோர் பம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியானது 1965ஆம் ஆண்டு துவங்கப்பட்டு  தற்போது வரை செயல் பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்று  முதல் ஐந்து வகுப்பு வரை செயல் பட்டு வருகின்றது. இதில் ஒரு தலை மையாசிரியர், ஒரு இடைநிலை ஆசி ரியர் உள்ளனர்.  இப்பள்ளியில், குறைவான குழந் தைகள் மட்டுமே கல்வி பயின்று வந்துள்ளனர். தற்பொழுது நாளடை வில் குழந்தைகள் பயின்று வரும் எண் ணிக்கையானது குறைய தொடங்கி உள்ளது. இந்த வருடம் கல்வி பயில்வதற்கு இரண்டு முதல் நான்கு  குழந்தைகள் மட்டுமே தயார் நிலையில்  இருக்கின்றனர். இதன் காரணமாக பள்ளி மூடும் நிலை அபாயம் உரு வாகி உள்ளது.  தமிழக அரசாங்கம் அரசு மற்றும்  அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பெறும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக் களிடம் போதிய விழிப்புணர்வு இல்லா தது, அரசுப் பள்ளியில் தூய்மையற்ற கழிப்பிட வசதி, பள்ளியை பாதுகாக்க காவலர்கள் இல்லாதது, பழுதடைந்த வகுப்பறைகளை பராமரிக்காமல் பல வருடங்கள் அப்படியே வைப்பது,  மாணவ, மாணவிகள் விளையாட போதுமான மைதான வசதி இல்லா தது போன்றவையே மாணவர் சேர்க்கை குறைய முக்கிய காரண மாக உள்ளன.  எனவே, மோர்பம்பாளையம் அரசு  பள்ளியில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித் துறையும்,  ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் இணைந்து முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு, இச்சுற்று வட்டார பகுதி மக்களிடையே அரசு பள் ளியின் நன்மை குறித்தும், அதிலுள்ள  வாய்ப்புகள் குறித்தும் விழிப்புணர்வு  ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக் கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து  எடுத்துரைக்க வேண்டும் என வலியு றுத்தி உள்ளனர்.