districts

img

ஏரிக்குள் அமர்ந்து சிபிஎம் கவுன்சிலர் போராட்டம்

நாமக்கல், ஜூலை 4- ஐந்து வருடங்களாக சாலை  அமைக்காததை கண்டித்து, எலச்சி பாளையம் அருகே ஏரிக்குள் அமர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் தலைமையில் போராட் டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற் பட்டது.  திருச்செங்கோடு வட்டம் அருகே எலச்சிபாளையம்  காவல் நிலையம் பின்புறம் 50 ஏக்கர் சுற்றளவில் ஏரி குளம் உள்ளது இதனை சுற்றி பொதுமக்கள் சென்று வரும் பாதை சூரப்புலி அம்மன் கோவில் முதல் அகரம் ஏரிக்கரை பிள்ளையார் கோவில் வரை மண் சாலையாக கடந்த 60  வருடங்களாக உள்ளது. இது குறித்து பகுதி மக்கள் கோரிக்கை வைத்து சாலை அமைக்க வேண்டும் என்று மனு அளித்து வந்தனர்.  இந்நிலையில், உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்வதற்கு முன்பு கடந்த 2018-19 ஆம் ஆண்டு  எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் திட்டம் மூலம் ஒரு கிலோமீட்டர் தொலை வில் ரூ.19 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டது. ஐந்து ஆண்டுகள் முடிவ டைந்த நிலையில் சாலை பணிகள்  முழுமையாக மேற்கொள்ள வில்லை. இதனால், இருபுறமும்  சீமை கருவேல மரங்கள் முளைத்து குண்டும், குழியுமா கவும் சேரும், சகதியுமாக இருப்ப தால், இப்பகுதி மக்கள் இவ்வழியே  செல்ல முடியாமல் அவதிக்குள்ளா கின்றனர்.  இந்நிலையில் இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சின் ராஜ் மற்றும் பிடிஓ உள்ளிட்ட அதி காரிகளுக்கு மனு கொடுத்தும் எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனையடுத்து, மார்க் சிஸ்ட் கட்சியின் ஒன்றிய 5  ஆவது வார்டு கவுன்சிலர் க.சுரேஷ்  தலைமையில் ஏரிக்குள் செல்லும்  சாலையில் அமர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இதில் சிபிஎம்  ஒன்றிய செயலாளர் கே.எஸ்.வெங்கடாசலம் ஒன்றிய குழு உறுப் பினர்கள் ரமேஷ். கிட்டுசாமி மற்றும்  பொதுமக்கள் திரளானோர் பங் கேற்றனர்.  இதனை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன்,  ஒன்றிய பொறியாளர் ஆனந்தி, கிராம நிர்வாக (பொறுப்பு) அலு வலர் சத்யராஜ் உள்ளிட்ட நேரில் வந்து உடனடியாக சாலை அமைப் பதற்கான நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித் தனர். இதனையடுத்து, போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென் றனர்.