districts

img

இடுவாய் டாஸ்மாக் கடையை அகற்ற டிச. 25 காலக்கெடு:

திருப்பூர், அக். 20 - இடுவாய் கிராமத்தில் உள்ள டாஸ்மாக்  கடையை டிசம்பர் 25ஆம் தேதிக்குள் அகற்று வது என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள் ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட் டம் நடத்திய நிலையில் டாஸ்மாக் மாவட்ட  மேலாளர் நேரில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த முடிவு எட்டப்பட்டது. இடுவாய் கிராமம் சீராணம்பாளையம் சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடை  செயல்பட்டு வருகிறது. மக்கள் நெருக்கம்  மிகுந்த பகுதியில் இக்கடை அமைந்திருப் பதால் கடைகளுக்கும், வேலைக்கும் செல் லும் பெண்கள், பள்ளி மாணவ, மாணவிக ளுக்கு பெரும் இடையூறாக உள்ளது.  எனவே இந்த டாஸ்மாக் கடையை  அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஊராட்சி மன்றத் தலைவர்  கே.கணேசன் தலைமையிலான இடுவாய்  ஊராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறை வேற்றியது. அத்துடன் கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் ஆறு கிராம சபைக் கூட்டங்களிலும், சமீபத்தில் மாவட்ட  ஆட்சியர் தலைமையில் அங்கு நடைபெற்ற  மக்கள் குறை தீர் முகாமிலும் என ஏழு முறை  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் ஊராட்சி மன்றத் தலைவர் கே. கணேசன் நான்கு முறை மாவட்ட ஆட்சியரை  சந்தித்து ஊராட்சி கோரிக்கைகள் குறித்து பேசியபோதும், டாஸ்மாக் கடையை அகற்ற  வலியுறுத்தி உள்ளார். இத்தனை தொடர் முயற்சிக்குப் பிறகும் டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட நிர்வா கமோ, டாஸ்மாக் நிர்வாகமோ எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. இந்த சூழ்நிலை யில் வியாழக்கிழமை டாஸ்மாக் கடையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித் தது. இப்போராட்டத்தில் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பங்கேற்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இப்போராட்டம் நடத்துவதாக அறிவிக் கப்பட்ட நிலையில், இடுவாய் கிராமத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். அத்து டன் டாஸ்மாக் மாவட்ட மேலாளரும் அங்கு  வந்துவிட்டார். எம்.பி. பங்கேற்புடன் முற்று கைப் போராட்டம் நடத்த வேண்டாம், பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என காவல்  துறையினர் கூறினர். எனினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் இடுவாய் பேருந்து நிறுத்த மைதானத்தில்  டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் இடுவாய்  வடக்கு கிளைச் செயலா ளர் கே.கருப்பசாமி தலைமையில் நடை பெற்ற இப்போராட்டத்தில் நிலவள வங்கி இயக்குநர் கே.ஈஸ்வரன், இடுவாய் ஊராட் சிமன்றத் தலைவரும், கட்சியின்  மாவட்டக்குழு உறுப்பினருமான கே. கணேசன், தெற்கு ஒன்றியச் செயலாளர்  சி.மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், கோவை தொகுதி எம்.பி. பி.ஆர். நடராஜன் ஆகியோர் டாஸ்மாக் கடையை  அகற்ற வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்திப் பேசினர். இப்போராட் டத்தில் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் கே.உண்ணிகிருஷ்ணன், ஜி.சாவித்திரி, டி.ஜெயபால், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.மைதிலி, பா.லட்சுமி, இடுவாய் தெற்கு  கிளைச் செயலாளர் சுந்தரம், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க இயக்குநர்கள் பி. இந்திராணி, கே.தமிழரசு, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆர்.ஈஸ்வரி, பி.ஈஸ்வரி உள் பட திரளானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் காவல் துறையினர் பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சிவக்கொழுந்து, மார்க் சிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் நான்கு மாத காலத்தில் மேற்படி டாஸ்மாக் கடையை அகற்றிக் கொள்வதாகத் தெரிவித்தார். எனினும் மார்க்சிஸ்ட் கட்சியினர் அதை ஏற்க மறுத்த னர். உடனடியாக இந்த கடையை அகற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகபட்சம்  இரண்டு மாத காலத்தில் இந்த இடத்தில்  இருந்து டாஸ்மாக் கடையை அப்புறப்ப டுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதை யடுத்து டிசம்பர் 25ஆம் தேதிக்குள் இடுவாய்  டாஸ்மாக் கடையை அகற்றுவதாக டாஸ்மாக்  மாவட்ட மேலாளர்  சிவக்கொழுந்து உறுதி யளித்தார்.  இந்த உத்தரவாதத்தை ஏற்று முற்றுகைப்  போராட்டம் நடத்தும் முடிவு விலக்கிக் கொள் ளப்பட்டது. எனினும் உறுதியளித்தபடி டாஸ் மாக் கடையை அகற்றாவிட்டால் தீவிர போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

;