districts

img

அடிப்படைக் கட்டமைப்போடு பாலம் அமைத்திடுக

அவிநாசி, செப்.4- அவிநாசி அருகே கணியம் பூண்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கட்டப்படும் பாலத்தை அடிப்படை கட்ட மைப்போடு பணிகள் தொடருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் ஊராட்சி மன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத் துள்ளார்.  திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், கணியம் பூண்டி  ஊராட்சிக்குட்பட்ட வஞ்சிபாளையம் பகுதியி லிருந்து திருப்பூர் செல்லும் சாலையில் புதிதாக பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பாலத்தின் அருகில்  500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செல்வதற்கு போதிய வழித் தடம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.  அத்துடன் பாலம் உயர்மான நிலையில்  கட்டப்பட்டு வரு கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பாதிப்படைவார்கள். மேலும், பாலத்தில் மழைநீர் வெளியேற முறையான வடி கால் அமைக்காததால் ரயில்வே பகுதியில் தேங்கும் நிலை  உருவாகிறது.  இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, வழித் தடம், வாகன ஓட்டிகளுக்கு ஏதுவாக பாலம் கட்டமைப்பு,  மழைநீர் வெளியேற முறையான வடிகால் வசதியுடன் கட்டு மான பணிகள் தொடர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி மற்றும்  கணியான் பூண்டி ஊராட்சி மன்ற 6 வதுவார்டு உறுப்பினர்  அமலி வெங்கடாசலம் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத் துள்ளனர்.