திருப்பூர், செப்.12- கூலித்தொழிலாளி தற்கொலைக்குக் கார ணமான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் மீது கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் நட வடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர் சங்கம் வலியு றுத்தி உள்ளன. மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட் டக்குழு உறுப்பினர் ஆ.சிகாமணி உள்ளிட் டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங் களன்று மனு அளித்தனர். அம்மனுவில், தனி யார் நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் நெருக்குதல் காரணமாக ராஜேஷ் கண்ணன் மன உளைச்சலில் ரயில் முன் பாய்ந்து தற் கொலை செய்து கொண்டார். ராஜேஷ் கண் ணனுக்கு மனைவியும், இரண்டு குழந்தை களும் உள்ளனர். ஆகவே மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக வட்டி வசூலில் ஈடு பட்ட பஜாஜ் நிதி நிறுவனத்தின் மீது கந்து வட்டி கொடுமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ராஜேஷ் கண்ணன் குடும்பத்தின ருக்கு அந்த நிறுவனத்திடம் இருந்து நஷ்ட ஈடாக ரூ.25 லட்சம் பெற்றுத்தர வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிதி நிறுவனங்கள் வசூல் செய்வதை எந்த ஒரு நிபந்தனையுமின்றி தள்ளி வைக்க வேண்டு மென ரிசர்வ் வங்கி கூறியபோதும், எந்த ஒரு நிதி நிறுவனமும் அந்த உத்தரவை அமலாக் கவில்லை. பஜாஜ் நிறுவனத்தில் இதுபோல் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனு கொடுக்க லாம் என்று ஆட்சியர் அறிவித்தால் ஏராள மான மக்கள் பாதிக்கப்பட்டது தெரிய வரும். மக்களை அச்சுறுத்தி குறிப்பாக பெண் களை ஆபாசமாக பேசி பண வசூலில் ஈடு படும் இது போன்ற நிதி நிறுவனங்கள் மீது சட் டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால், வரும் காலத்தில் ராஜேஷ் கண்ணன் போல இழப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.
மாதர் சங்கம் மனு
இதேபோல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பவித்ரா தேவி, மாவட்ட செயலாளர் கு.சரஸ்வதி உட் பட நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் இந்த சம்பவம் குறித்து கோரிக்கை மனு அளித்த னர். அதில், திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நுண் நிதி, தனியார் நிதி நிறுவனங்கள் உள் ளன. இங்கு மக்களுக்கு வழங்கிய கடனை வசூலிக்க தனியாக ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்னர்.இவர்கள் கடன் பெற் றோரிடம் அடாவடித்தனமாக நடந்து கொள் கின்றனர். குறிப்பாக கடன் வாங்கியோர் கடன் தொகையை திரும்பச் செலுத்த கால தாம தம் ஆனாலோ, தவணைத் தொகை கட்ட தவ றினாலோ, அதிக வட்டி வசூலிப்பதும், அநாக ரிகமான வார்த்தைகளை பயன்படுத்தி, அரு கில் குடியிருப்போர் மத்தியில் கேவலப் படுத்தும் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். திருப்பூர் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத் தில் திருப்பூர் அங்கேரிபாளையம் ராஜேஷ் கண்ணன் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கடன் பெற் றிருந்தார். இந்த கடன் தொகையில் இன்சூ ரன்ஸ் பிடித்தம் போக எனச் சொல்லி ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கையில் கொடுத்துள்ள னர். இந்த தொகைக்கு ராஜேஷ் கண்ணன் மாதந்தோறும் வட்டியும், அசலும் செலுத்தி வந்துள்ளார். இதுவரை ரூ.2 லட்சத்துக்கு மேல் அசலும், வட்டியும் செலுத்தியுள்ளார்.
ஆனால், பஜாஜ் நிறுவன ஊழியர்கள், “நீங்கள் செலுத்திய தொகை வட்டிக்கே சரி யாகிவிட்டது. இன்னும் நீங்கள் ரூ.1 லட்சத் துக்கும் மேல் கொடுக்க வேண்டும்” என்று அவர்களிடம் கூறி உள்ளனர். கடன் தொகை ரூ.2 லட்சத்துக்கு மேல் வட்டியும், அசலும் செலுத்திய பின்பும், அதிக வட்டி கேட்கிறார்களே என்று தனது மனைவியிடம் கூறி வருத்தப்பட்டு மனமு டைந்த நிலையில் ராஜேஷ் கண்ணன், கடந்த செப். 8ஆம் தேதி ரயிலில் விழுந்து அவர் தற் கொலை செய்து கொண்டார். மாவட்ட ஆட்சி யர் விசாரணை செய்து அதிக வட்டி கேட்டு மிரட்டும் நுண் நிதி நிறுவனங்கள், தனியார் நிதி நிறுவனங்களை கண்காணிப்புக்கு உட் படுத்த வேண்டும். அநாகரிகமான செயலில் ஈடுபடும் மற்றும் அதிக வட்டி கேட்டு துன்புறுத் தும் சம்பந்தப்பட்ட வங்கியைச் சேர்ந்தவர் கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். அத்துடன் ராஜேஷ் கண்ணன் இறப்புக்கு காரணமான பஜாஜ் நிறுவன ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக் கப்பட்ட குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூ.25 லட் சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தவறு செய்யும் நிறுவனங் கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, இது போல துயர சம்பவங்கள் இனியும் நடக்கா மல், பொதுமக்களை காக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட குழு கேட்டுக் கொண்டுள் ளது.