districts

img

சிறப்பு கிராம சபையில் பங்கேற்காத கவுன்சிலர்கள்

தாராபுரம், டிச.7- தாராபுரம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டத் தில் உறுப்பினர்கள் வராததால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். தாராபுரம் அருகே உள்ள அம்மா பட்டி அரசு ஆரம்பப் பள்ளியில்  கிராம சபை கூட்டம் செவ்வாயன்று  நடைபெறும் என கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் அறிவித்திருந்தார். அதன் படி, கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செவ்வாயன்று காலை 10  மணி அளவில் அம்மாபட்டி அரசு பள்ளி வளாகத்திற்கு குழுமியிருந் தனர். அப்போது, அடிப்படை வசதி களான குடிநீர், தெரு விளக்கு, சாக்கடை போன்ற நீண்ட நாட் களாக நிறைவேற்றப்படாத கோரிக்கை குறித்து பொதுமக்கள் முறையிட முடிவு செய்திருந்தனர். ஆனால், இந்த ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ள நிலை யில், 3 வார்டு உறுப்பினர்கள் மட் டுமே கிராம சபைக் கூட்டத்திற்கு வந் திருந்தனர். மீதமுள்ள 6 வார்டு உறுப் பினர்கள் சிறப்பு கிராம சபை  கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்த னர். இதனால் கூட்டத்தில் பங் கேற்ற பொதுமக்கள், தங்களது வார்டு உறுப்பினர்களிடம் பிரச் சனைகளை தெரிவிக்க முடியாத தால் கடும் அதிருப்தியடைந்து வாக் குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட் டது. இதைத்தொடர்ந்து ஜனவரி  26 ஆம் தேதியன்று நடைபெற உள்ள  கிராம சபைக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் கவுண் டச்சிபுதூர் ஊராட்சி வார்டு உறுப் பினர்கள் உள்ளிட்ட அனைவரை யும் வரவழைக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். இல் லாத பட்சத்தில் அன்றைய தினம் கிராம சபை கூட்டத்தில் பொது மக்கள் யாரும் பங்கேற்க மாட்டோம் என உறுதிபட தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் சிறப்பு கிராம சபை கூட்டம் முடிவடைந்தது.