districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

கோவை, ஜூலை 17- வால்பாறை அருகே கர்ப்பிணியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே, 108 ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது. கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (25). நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு ஞாயிறன்று நள்ளிரவில் பிர சவ வலி ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வால்பாறை  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான 108 ஆம்புலன்ஸ்  வாகனத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் ஓட்டுநர் வினோத் குமார், மருத்துவ தொழில் நுட்ப பணியாளர் தேவிகலா இருவரும் நள்ளிரவு 1.30 மணி யளவில் வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதிக்கு சென்றனர். பின் னர் லட்சுமியை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு  வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு வரும் வழியில் பிரசவ வலி அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து தேவிகலா, லட்சுமிக்கு பிரசவம் பார்த் துள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந் தது. இதனைத்தொடர்ந்து தாய் - குழந்தை இருவரையும் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக் காக சேர்த்தனர்.

ஓய்வு பெற்ற மின் ஊழியர் அமைப்பு பேரவை

ஈரோடு, ஜூலை 16- மின்வாரியம் பொதுத்துறையாக நீடிக்க வேண்டும் என மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சக்தி கோட்ட பேரவை கூட் டம் சத்தியமங்கலம் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. என்.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் எஸ்.ஏ. ராம்தாஸ் சிறப்புரை ஆற்றினார். சிஐடியு தலைவர் கே.எம்.விஜயகுமார் வாழ்த்தி பேசினார்.  மின்வாரியம் தொடர்ந்து பொதுத்துறை யாக நீடிக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு  விரோதமான ஆணையை ரத்து செய்ய வேண் டும். புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ செலவு செய்த தொகையை மின்வாரியமே வழங்கிட வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. சக்தி கோட்டத்தலைவராக பி.ஆர்.முத்துசாமி, செயலாளராக பி.ராமசாமி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.'

ஆசிரியர் நியமன தேர்வை உடனடியாக நடத்துக

சேலம், ஜூலை 17- ஆசிரியர் நியமன தேர்வை அரசு உடன டியாக நடத்தி நிரந்தர ஆசிரியர்களை நிய மிக்க வேண்டும் என வலியுறுத்தி, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். டெட் தேர்வில் தமிழ்நடு முழுவதும் 80  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற் றுள்ளனர். அதில் ஒரு சில நபர்கள் வெவ்வேறு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்ச்சி பெற்ற  ஆசிரியர்கள், ஆசிரியர் நியமன தேர்வுக்கு காத்திருக்கின்றனர். இந்நிலையில், தமிழ் நாடு அரசு ஆசிரியர் நியமன தேர்வை உடனடி யாக நடத்த வலியுறுத்தி டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட னர். இதில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர் தேர்வு  எழுதிய நபர்கள் கலந்து கொண்டனர்.

இன்று மின்தடை

நாமக்கல், ஜூலை 17- திருச்செங்கோடு மற்றும் ஜேடர்பாளையம் துணை மின் நிலையங்களில் செவ்வா யன்று (இன்று) பராமரிப்பு பணிகள் நடைபெற உள் ளன. இதனால் மின்தடை ஏற் படும் பகுதிகள்: திருச்செங் கோடு நகராட்சி பகுதி முழு வதும், கருவேப்பம்பட்டி, ஆத்தூராம்பாளையம், நாரா யணம் பாளையம், அம்மா பாளையம், சீனிவாசம்பா ளையம், தேவனாங்குறிச்சி, கீழேரிப்பட்டி, சிறுமொளசி, அணிமூர், ஆண்டிபாளை யம், தோக்கவாடி, வரகூராம் பட்டி, செங்கோடம்பாளை யம் முதல் சிந்தம்பாளையம் வரை, ஜேடர்பாளையம், வட கரையாத்தூர், காளிபாளை யம், கரப்பாளையம், கண்டி பாளையம், வடுகபாளை யம், சிறுநல்லிக்கோவில், கள்ளுக்கடைமேடு, கொத்த மங்கலம், அரசம்பாளையம்,  நஞ்சப்பகவுண்டம்பாளை யம், நாய்க்கனூர், குரும்பல மகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம் மேற்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை  5 மணி வரை மின்சாரம் நிறுத் தம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறக்க கோரிக்கை

கோவை, ஜூலை 17- செம்மேடு கிராமத்தில் மூடப்பட்ட அங் கன்வாடி மையத்தை திறக்க வேண்டும் என கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி யினர் மனு அளித்தனர். அம்மனுவில் தெரிவித்திருப்பதாவது, கோவை, தொண்டாமுத்தூர் ஒன்றியம், இக் கரை போளுவாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட செம்மேடு கிராமத்தில் என்ஜிஆர் வீதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. தற்போது, அங்கன்வாடி மையம் மூடப்பட் டுள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்த நிலையில், குழந்தைகள் எண்ணிக்கை குறைவு எனக் கூறி அங்கன்வாடி மையத்தை மூடியதாக தெரிகிறது. இதன் காரணமாக செம்மேடு கிராமத்தில் காந்தி காலனி, என்ஜிஆர் வீதியில் உள்ள குழந்தைகள் இந்த வருடம் அங்கன்வாடி மையத்தில் சேர முடியாத சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இப்பகுதி யில் உள்ள தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிக ளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு கள் கிடைப்பதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் மூடப்பட்ட அங்கன் வாடி மையத்தை மறுபடியும் திறக்க வேண் டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பாட்டில் வியாபாரிகள் நலச்சங்கத்தினர் அளித்த மனுவில், டாஸ் மாக் கடைகளில் திரும்ப வராத காலி பாட்டில் களை திரும்ப வந்ததாக கூறி முறைகேடுகள் நடைபெறுகிறது. டாஸ்மாக் பாட்டில்களை சுத் தம் செய்யும் தொழிலில் ஈடுபடும் வியாபாரிக ளுக்கு கொடுக்காமல் கண்ணாடி உடைவு கம் பெனிக்கு வழங்குவதால் பாட்டில் சுத்தம் செய் யும் தொழிலில் ஈடுபடும் வியாபாரிகளுக்கும், மற்றும் கிராமப்புற பெண்களுக்கும் வேலை வாய்ப்பு பறிபோகிறது. இதனால் பாட்டில் சுத் தம் செய்யும் தொழிலாளர்கள், பாட்டில் வியா பாரிகள் பாதிக்கப்பட்டு வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள னர்.

செந்தில்பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம் 

சென்னை, ஜூலை 17- சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரி கள் கைது செய்தனர். அப்போது அவரது உடல்நிலை பாதிக் கப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.  காவேரி மருத்துவமனையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந் தார். அதேசமயம் அவரது நீதிமன்றக் காவல் வரும் 26 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட தற்கு எதிராக அவரது மனைவி மேகலா சென்னை  உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசா ரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். பின்னர், மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசார ணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், செந்தில் பாலாஜி யின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்க தல்ல என்றும், செந்தில் பாலாஜியை கைது செய்தது மற்றும்  நீதிமன்றக் காவல் ஆகியவை சட்டப்பூர்வமானது என்றும் தீர்ப்பளித்தார். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி திங்களன்று   மாலை காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் 26ஆம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டிருப்பதால், நீதிமன்ற உத்தரவுப்படி அவர் உட னடியாக புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு  அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படும் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கோவை குற்றாலம் இன்று திறப்பு

கோவை, ஜூலை 17- வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் தற் காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், செவ்வாயன்று (இன்று) முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்து வனத்துறை அறிவித்துள்ளது. கோவையின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் கோவை குற்றாலத்தில் ஜூலை முதல் வாரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கோவை குற்றாலம் தற்காலி கமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்திருந் தது. கோவை மாவட்டத்தில் ஜூலை முதல் வாரத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால், கோவை குற்றாலம் பகுதியில் நீரின் வரத்து அதிகமாகி வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. இதன் காரணமாக கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு தற்காலிகமாக கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறை தெரி வித்திருந்தது. நீர் வரத்து குறைந்து இயல்பான நிலைக்குத் திரும்பியவுடன் கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். தற்போது மழை  பெய்யாமல், நீர்வரத்தும் குறைந்த அளவாக இருப்பதால் செவ் வாயன்று (இன்று) முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது.

நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயக்கம்

கோவை, ஜூலை 17- ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் போதிய  மழை இல்லாததால் முதல் பருவ நெல் சாகுபடிக்கு விவசாயி கள் தயக்கம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றியத்தில் 2 போகத் தில் 5,400 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு ஆழி யார் அணையிலிருந்து புதிய ஆயகட்டு பாசனம், பழைய ஆயக்கட்டு பாசனம் வழியாக தண்ணீர் வழங்கப்படுகிறது. கடந்தாண்டு 2 ஆம் போகத்தில் நெல் நடவு செய்யப்பட்டு, நன் றாக அறுவடையும் நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு கணிசமான வருமானமும் கிடைத்தது. ஆண்டுதோறும் ஜூன்  முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால், நடப்பாண்டில் கடந்த 20 நாட்கள் தாமதமாக மழை  பெய்தது. இதன் விளைவாகவும், கோடை வெயிலின் தாக்கத் தாலும் ஆழியார் அணை, ஆழ்துளை கிணறு, குளம், குட்டை  உள்ளிட்ட நீர் ஆதாரங்களில் நீர்மட்டம் சரிய தொடங்கியது. இருப்பினும் பாசன வசதிக்காக கடந்த ஜூன் மாதம் ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீரை வீணடிக்காமல் பயன்படுத்த விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். இருப்பினும் பெரும்பாலான விவசாயி கள் நெல் பயிரிட முன் வரவில்லை. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஆடிப் பட்டத்திற்கு நடவு செய்ய 30 நாட்களுக்கு முன்பு விதைகள் முளைக்க வைக்கப்பட்டு நெல் நடவு செய்ய தயாரான நிலை யில் வைக்கப்படும். நடப்பாண்டு போதிய மழை இல்லாததா லும், அணையில் நீர்மட்டம் குறைந்ததாலும் நெல் பயிரிட விவசாயிகள் முன் வரவில்லை. இதன் விளைவாக விளை  நிலங்களில் முட்புதர்கள் நான்கு அடி உயரத்திற்கு வளர்ந் துள்ளது. மேலும், புற்களும் வளர்ந்து காணப்படுகிறது. இத னால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பொழியும் பட்சத்தில் நெல் நடவு செய்யப் படும், என்றனர்.

கஞ்சா பறிமுதல்

சூலூர், ஜூலை 17- சூலூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்ப தாக தனிப்படை போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காங் கேயம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே விரைந்து சென்ற போலீசார், அப்பகுதி யில் சோதனை மேற்கொண் டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்தி ருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர ஷஹானி  மகன் ஷிவ் குமார் ஷஹானி (35) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 2 கிலோ கஞ் சாவை பறிமுதல் செய்தனர்.
 

 

 

;