உடுமலை, டிச.23- வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை மீறி ஜம்புக்கல் மலையில் தொடர்ந்து இயற்கை அழிப்பு நடைபெற்று வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம் ஆண்டியகவுண்டனூர் ஊராட்சியிலுள்ள ஜம்புக்கல் மலைபகுதியில் கடந்த 1970 ஆம் ஆண்டு சுமார் 300 குடும்பத்திற்கு 0.50 சென்ட் முதல் 2.20 ஏக்கர் வரை விவசாய பயன்பாட்டிற்கு நிபந்தனை பட்டா தமிழக அரசால் வழங்கப்பட்டது. ஆனால், இங்கு நிலவிய கடும் வறட்சியின் காரணமாக விவ சாயம் செய்ய முடியாமல் ஜம்புக்கல் மலை பகுதியில் இருந்து விவசாயிகள் வெளி யேறினர். இதை பயன்படுத்தி தற்பொழுது தனிநபர் சிலர் மலைபகுதி முழுவதும் ஆக் கிரமிப்பு செய்துள்ளார். இதையடுத்து அப் பகுதி விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவ சாய சங்கத்தின் தலைமையில் பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.
இதன் விளைவாக கடந்த நவ.12 ஆம் தேதி திருப்பூர் மாவட்ட நீதிபதி உத்திரவின் பெயரில் வழக்கறிஞர்கள் குழு மலை பகுதி யில் ஆய்வு செய்தனர். பின்னர், உடுமலை கோட்டாட்சியர் ஆக்கிரமிப்பு தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார். இதன்பின் ஜம்புக்கல் மலை பகுதி முழுவதும் நில அளவு செய்வது என் றும், அதுவரை அங்கு யாரும் மேல் நடவ டிக்கையில் ஈடுபடகூடாது என்று உத்தரவி டப்பட்டது. ஆனால், இந்த உத்தரவை மீறி கடந்த இரண்டு நாட்களாக கனரக வாக னங்களை கொண்டு மீண்டும் மலையை அழிக்கும் பணியில் ஆக்கிமிரப்பாளர்கள் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக் கின்றனர். இது குறித்து உடுமலை வருவாய்த் துறை கோட்டாட்சியர் கீதாவிடம் கேட்ட போது, ஜம்புக்கல் மலையில் கனரக இயந்தி ரங்கள் மூலம் வேலைகள் நடப்பதாக தக வல் கிடைத்தது. இதுதொடர்பாக உடுமலை வட்டாட்சியர் ஜம்புக்கல் மலைக்கு சென்று விசாரணை செய்து வருகிறார், என்றார்.