நாமக்கல், ஜுலை 5- தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்டவ ருக்கு மருத்துவமனை நிர்வாகம் ரூ.5 லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், ஸ்டேட் பேங்க் கால னியில் வசித்து வரும் ராஜகோபாலன் மகன் கிருஷ்ணமணி என்பவருக்கு கடந்த 2016 ஜூன் 30 ஆம் தேதியன்று சாலை விபத்து ஏற் பட்டு, வலதுகாலில் முறிவு ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் 12 நாட்கள் மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்த பின்னரும், காலில் காயம் குணமாகா வில்லை. அதனை சரி செய்ய மீண்டும் பிளாஸ் டிக் அறுவை சிகிச்சை செய்யலாம் என மருத் துவர் தெரிவித்துள்ளார். இதனை நம்பி மீண் டும் அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, 2016 ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட் கள் உள் நோயாளியாக இருந்துள்ளார். இதன்பின் நான்கு மாதங்கள் கழித்தும், கால் குணமாகாததால், கோவையிலுள்ள உள்ள வேறு ஒரு தனியார் மருத்துவம னைக்கு சென்று ஆலோசனை செய்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் முந்தைய அறுவை சிகிச்சையில் எலும்புகள் ஒன்று சேராதால் மீண்டும் அறுவை சிகிச்சை செய் யப்பட்டு ஒன்று சேர்க்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து 2016 டிசம் பர் மாதத்தில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதற்கிடையே முதலில் சிகிச்சை செய்த மருத்துவமனை கவனக் குறைவாக செயல்பட்டதாக, கிருஷ்ணமணி கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத் தில் 2018 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய் தார். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், செவ்வாயன்று நீதிபதி வீ.ராம ராஜ் தீர்ப்பு வழங்கினார். அதில், முதலாவது அறுவை சிகிச்சையில் எலும்புகளை இணைக்க பயன்படுத்தப்பட்ட உபகரணம் (rod) சரியான நிலையில் பொருத்தப்படாத தால், கிருஷ்ணமணிக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதிலிலும் பிரச்ச னையை தீர்க்க சம்பந்தப்பட்ட மருத்துவ மனை தவறிவிட்டது. வேறு மருத்துவமனை யில் மூன்றாவதாக அறுவை சிகிச்சை மூலம் பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது நிரூ பிக்கப்பட்டுள்ளது. இதனால் கவனக்குறைவாக மருத்துவ சிகிச்சை அளித்து சேவை குறைபாடு புரிந்த மருத்துவமனை பாதிக்கப்பட்ட கிருஷ்ண மணிக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவுகளுக் கான ரூபாய் இரண்டரை லட்சம் மற்றும் அவ ருக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூபாய் இரண்டரை லட்சம் நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும். தவறினால் பணம் வழங்கப்படும் நாள் வரை 9 சதவிகித வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்றும் நுகர் வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.