districts

img

ஜூலை 14 – 18: கன்ஸ்ட்ரோ மெகா 2023 திருப்பூரில் கட்டுமான பொருட்கள் கண்காட்சி

திருப்பூர், ஜூலை 10 – திருப்பூர் சிவில் இன்ஜினியர்கள் சங்கம்  நடத்தும் 18ஆவது கட்டட கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி “கன்ஸ்ட்ரோ மெகா  2023” வரும் 14ஆம் தேதி முதல் 18ஆம்  தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகி றது. திருப்பூர் சிவில் இன்ஜினியர்கள் சங்கத்  தலைவர் எஸ்.ஜெயராமன், செயலாளர் ஆர். பிரகாஷ், கண்காட்சித் தலைவர் கே.ராதா கிருஷ்ணன் மற்றும் சங்கத்தின் உடனடி முன் னாள் தலைவர் சௌ.ஸ்டாலின்பாரதி ஆகி யோர் திங்களன்று செய்தியாளர்களிடம் கூறி யதாவது: திருப்பூர் தாராபுரம் சாலை வித்யா கார்த்தி திருமண மண்டபத்தில் நடைபெறும்  இக்கண்காட்சியை மாநில தமிழ் வளர்ச்சி  செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  தொடக்கி வைக்கிறார். கண்காட்சி மலரை எம்.பி. கே.சுப்பராயன் வெளியிட, மேயர் ந. தினேஷ்குமார் பெற்றுக் கொள்கிறார். தெற்கு  எம்எல்ஏ க.செல்வராஜ் சங்கத்தின் புதிய  கைபேசி செயலியை தொடக்கி வைக்கிறார்.  மாவட்ட ஆட்சியர் த.கிறிஸ்துராஜ், மாநக ராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பன வர், துணைமேயர் ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். முற்றிலும் குளிரூட்டப்பட்ட வளாகத்தில், 200 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. திருப்பூர் மக்களுக்கு கட்டட கட்டுமானப் பொருட்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த  வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டுதோ றும் இக்கண்காட்சியை நடத்தி வருகிறோம்.  இந்த ஆண்டு முன்னணி கட்டுமானப் பொருட் கள் விற்பனை நிறுவனங்கள் பங்கேற்கின் றன. பசுமை கட்டுமானம் சார்ந்த செங்கல், கம்பி, சிமெண்ட், ரெடிமேட் காங்கிரீட், மரம்,  மரம் சார்ந்த பொருட்கள், டைல்ஸ், கிரா னைட், மார்பிள்ஸ், எலக்ட்ரிகல், மாடர்ன் பிளம்பிங் பொருட்கள், மின்விளக்குகள், கண்காணிப்பு கேமிரா, நவீன சமையலறை சாதனங்கள், சூரியஒளி சாதனங்கள் உள்ளிட் டவை இடம் பெறுகின்றன. அத்துடன் பழைய கட்டிடங்கள் நவீன  முறையில் அகற்றுதல், பழைய கட்டிடங்களை  இருக்கும் இடத்தில் இருந்து வேறு இடத் துக்கு நகர்த்துதல் உள்ளிட்ட தொழில் நுட் பங்கள் இந்த ஆண்டு இடம் பெறுகின்றன. இந்தாண்டு சுமார் 30 ஆயிரம் பார்வை யாளர்கள் இக்கண்காட்சியை பார்வையிட வருவார்கள், ரூ.250கோடிக்கு வர்த்தக விசா ரணை நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாக கூறினர். ஒவ்வொரு நாளும் மாலை நேர கலை நிகழ்ச்சிகள், ஹோமியோ, சித்தா, யுனானி உள்ளிட்ட மாற்று மருத்துவ முகாம்கள், கண்  சிகிச்சை முகாம் நடைபெறும். அனுமதி இல வசம். தினமும் காலை 10 மணி முதல் இரவு  8 மணி வரை இக்கண்காட்சி நடைபெறும் என் றனர். இச்சந்திப்பின்போது துணைத்தலைவர் குமார் சண்முகம், கண்காட்சி செயலர் எஸ். ராஜசேகரன், பொருளாளர் டி.மகேஷ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.