விபத்து - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்
சூலூர், பிப்.2- கரும்பத்தம்பட்டி அருகே 2 குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர் சாலையைக் கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த பைக் மோதி விபத்துக்குள் ளான, பதை பதைக்க வைக்கும் கண்காணிப்பு கேமரா காட்சி கள் வெளியாகிள்ளது. கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி கணபதி நகர் பகுதி யில் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி மல்லிகா இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வியாழனன்று மல்லிகா வழக்கம்போல தனது குழந்தை களை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது சோமனூர் சாலையை கடக்க முயன்ற நிலையில் கல்லூரி மாணவர்கள் வந்த இருசக்கர வாகனம், மல்லிகாவின் இருசக்கர வாகனத்தில் பயங்கரமாக மோதியது. இதில் மல்லிகாவுடன் பயணித்த 2 குழந்தைகளும், கல்லூரி மாணவர்களும் தூக்கி வீசப் பட்டனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்சை வரவழைத்து, முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விபத்தில் படுகாயமடைந்த குழந்தைகள் உட்பட நால்வருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில் விபத்து தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் மல்லிகா தனது 2 குழந்தைகளுடன் வாகனத்தில் சாலையை கடக்க முயல்வதும் கல்லூரி மாணவர்கள் வந்த பைக் பயங்கர மாக மோதி சிதறுவதும் அதில் அனைவரும் தூக்கி வீசப் படும் பதை பதைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளத்தனமாக விற்ற மதுவகைகள் பறிமுதல்
சூலூர், பிப். 2- பெட்டிக்கடை மற்றும் வீடுகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்களை பதுக்கிவைத்து விற்பனை செய்யப்பட்ட புகாரில், ஒருவரை கைது செய்த போலீசார் மது பாட்டில் களை பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம், சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளபாளையம் பாப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக வீடுகள் மற்றும் பெட்டி கடைகளில் மது விற்பனை நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் போட்டோக்கள் மற்றும் வாட்ஸ் அப் வீடியோக்கள் வைரலாகி வந்தது. அதில், குறிப்பாக லாரி ஓட்டுநர் ஒருவர், பெட்டி கடையில் மதுபானம் விற்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது வலைதளங்களில் வைரலான நிலையில் போலீசார் தனிப் படை அமைத்து அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பாப்பம்பட்டி பகுதியில் பெட்டிக்கடையில் மது விற்பனை செய்து வந்த சுவாமிநாதன் என்பவரை பிடித்து விசாரித்துள்ளனர். அவர் பெட்டிக்கடைக்குள் வைத்து அந்த வழியாக செல்லக்கூடிய வட மாநில நபர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கு மதுபானத்தை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்த 50 பாட்டில் மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.
பசுந்தேயிலைக்கு ரூ.18.58 ஆக விலை நிர்ணயம்
உதகை, பிப்.2- பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.18.58 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தேயிலை வாரிய செயல் இயக்குநர் எம்.முத்துக்குமார் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசா யமே பிரதானமாக இருந்து வருகிறது. தனி யார் தேயிலை எஸ்டேட்டுகள் மட்டுமின்றி, சிறு விவசாயிகளும் தேயிலை விவசா யத்தில் ஈடுட்டு வருகின்றனர். தேயிலை விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பறிக் கும் பச்சை தேயிலைக்கு கட்டுபடியான விலை கிடைப்பது இல்லை என்றும், ஒன்றிய அரசு பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி, ஒன்றிய அரசின் தேயிலை வாரியம் மூலம் மாதந்தோறும் பசுந்தேயி லைக்கு விலை நிர்ணயம் செய்ய மாவட் டத்தில் விலை நிர்ணய குழு அமைக்கப்பட் டுள்ளது. இந்த குழு பச்சை தேயிலைக்கு சராசரி விலை நிர்ணயம் செய்து வருகிறது. இதன்படி கடந்த ஜனவரி மாத மாவட்ட சராசரி விலையாக பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு 18 ரூபாய் 58 காசு என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தேயிலை வாரிய தென் மண்டல செயல் இயக்குநர் எம்.முத்துகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது, 2021 ஆம் ஆண்டின் தேயிலை (சந்தைப்படுத்துதல்) கட்டுப்பாட்டு ஆணை யின்படி பசுந்தேயிலையின் மாவட்ட சராசரி விலை மாதந்தோறும் நிர்ணயம் செய்யப் பட்டு வருகிறது. இதன்படி கடந்த ஜனவரி மாத மாவட்ட சராசரி விலையாக பசுந் தேயிலை கிலோ ஒன்றுக்கு 18 ரூபாய் 58 காசு நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை கடந்த ஜனவரி மாதத்தில் நடை பெற்ற தேயிலை ஏலத்தில் வாங்கும் தேயிலை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்த சிடிசி தேயிலை தூளின் விற்பனை விலையை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த சராசரி விலையை மாவட்டத்தி லுள்ள அனைத்து வாங்கும் தேயிலை தொழிற்சாலைகள் தேயிலை சிறு விவசாயி களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இளம்பெண்ணை கடத்திய முதியவர்
தருமபுரி, பிப்.2- தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகேயுள்ள தாசர அள்ளி கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் கல்லூரியில் படித்து வந்த நிலையில், கல்லூரிக்கு செல்வதை நிறுத்தி விட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் அந்த இளம்பெண் மாயமாகிவிட்டார். இது குறித்து மொரப்பூர் போலீசில் பெண்ணின் தந்தை புகார் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை தேடி வந்தனர். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு பெரியப்பா முறை உள்ள முருகன் (55) என்பவர்தான் அந்த பெண்ணை ஆசை வரத்தை கூறி அழைத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் இளம்பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்ப டைத்தனர்.
சேலம் மாநகராட்சி பெண் கவுன்சிலர் மீது வழக்கு பதிவு
சேலம், பிப்.2- சேலம் மாநகராட்சி கவுன்சிலர் மீது பொது இடத்தில் ஆபாசமாக திட்டுதல், குற்றம் கருதி மிரட்டல், திருட்டு வழக்கு உள்ளிட்ட பிரிவு களின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகராட்சியின் 47வது வார்டு கவுன்சிலராக புனிதா உள்ளார். இவர், அரசின் கட்டுமான பணிக்காக வைத்தி ருக்கும் ஜல்லிகளை திருடி வருகிறார் என கார்கில் நகர், குகை பகுதியை சேர்ந்த நவமணி என்பவர் சேலம் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சேலம் மாநகரம் கொண்டலாம்பட்டி மண்டலத்தில் கார்கில் நகர் பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதி திராவிட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரியம் மூலம் எல்ஐஜி அடுக்குமாடி குடியிருப்புகள் அங்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு, தகவல் பலகைகளை நட நான்கு தட்டு ஜல்லி தேவைப்பட்டது. உடனடியாக அப்பகுதியின் மாநகராட்சி ஏசியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு ஜல்லி எடுத்து பெயர் பலகைகளை அமைத்துக் கொண்டிருந்த போது, மாமன்ற உறுப்பினர் புனிதாவின் கணவர் யாரை கேட்டு ஜல்லிகளை அள்ளு கிறீர்கள்? இது எங்கள் வார்டு எனது மனைவி தான் கவுன்சிலர் எங்களைக் கேட்காமல் ஜல்லிகளை அள்ளக்கூடாது என மிரட்டி யுள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அங்கு வந்த கவுன் சிலர் புனிதா என் கணவர் என்ன சொல்கி றாரோ அதை தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். குடியிருப்பு பகுதியில் சாலைகள், மருத்துவமனைகள் கழிவுநீர் போக்கிகள் கட்ட வைத்திருந்த ஜல்லியை இரவு நேரத் தில் தொடர்ந்து கவுன்சிலர் புனிதா மற்றும் அவரின் கணவர் சுதந்திரம் ஆகியோர் திருடி செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது. தட்டி கேட்டாலும் கொலை மிரட்டல் விடுக்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நவமணி கணவர் பெயர் அசோகன் என்பவர் செவ்வாய்பேட்டை காவல் நிலை யத்தில் புகார் மனுவை பொதுமக்கள் சார்பில் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட செவ்வாய் பேட்டை காவல் துறையினர் சேலம் மாநக ராட்சி 47வது மாவட்ட உறுப்பினர் புனிதா மற்றும் அவரது கணவர் சுதந்திரம் தந்தை துரை சகோதரி தாமரைச்செல்வி ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். குறிப்பாக பொது இடத்தில் ஆபாசமாக திட்டுதல், குற்றம் கருதி மிரட்டல், திருட்டு வழக்கு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்த உள்ளனர்.
திருப்பூரின் தொய்வை நாடாளுமன்றத்தில் ஒலிக்க சு.வெங்கடேசன் எம்.பி.,யிடம் ஏ.சக்திவேல் வேண்டுகோள்
திருப்பூர், பிப். 2 - திருப்பூர் தொழிலில் ஏற்பட்டுள்ள தொய்வைப் பற்றி மத் திய அரசு என்ன செய்ய வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி., நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒலிக்க வேண்டும் என இந்திய ஏற்றுமதி சங்கங்கள் கூட்டமைப் பின் தலைவரும், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் கௌரவத் தலைவருமான ஏ.சக்திவேல் கூறினார். தமிழக அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின் னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 19ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் கடந்த ஞாயிறன்று மாலை நடை பெற்ற இலக்கிய நிகழ்ச்சியில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத் தலை வரும், மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் கலந்து கொண்டு “சரித்திரம் தேர்ச்சி கொள்!” என்ற தலைப்பில் உரையாற்றினார். முன்னதாக இந்த நிகழ்வில் பங்கேற்ற இந்திய ஏற்றுமதி சங்கங்கள் கூட் டமைப்பின் தலைவர் ஏ.சக்திவேல் பேசுகையில், நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் முழக்கம் தில்லியில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.மதுரை மாந கரத்துக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்காக சேர்ந்து ஒட்டு மொத்த எம்.பி.க்களையும் வைத்து குரல் ஒலிப்பவர் வெங்கடேசன். இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால், சில பேர் எம்.பி.யாகி விட்டால் லெட்டர் பேடு, விசிட்டிங் கார் டோடு முடித்து விடுவார்கள். வெங்கடேசன் அப்படிப்பட்ட வர் அல்ல. தோளோடு தோள் நின்று தமிழக மக்களின் குறை களைத் தெரிந்து கொண்டு, அதை தில்லியில் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு 24 மணி நேர மும் செயல்பட்டுக் கொண்டிருப்பவர் வெங்கடேசன். இப் போது திருப்பூர் தொழிலில் சில தொய்வு ஏற்பட்டுள்ளது. அந்த தொய்வை நீங்கள் கண்டிப்பாக பாராளுமன் றத்தில் உரத்த குரலோடு ஒலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மத்திய அரசாங்கம் என்ன செய்ய வேண் டும் என்பதை உங்களுக்கு அனுப்புகிறேன். அதை தயவு செய்து வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் உங்கள் குரலை ஒலிக்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். இவ் வாறு ஏ.சக்திவேல் கூறினார்.
கறவை மாடுகளுக்கு தடுப்பூசி முகாம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
அவிநாசி, பிப்.2- கறவை மாடுகளில் கருச்சிதைவு ஏற்ப டுத்தும் புரூசெல்லோசிஸ் நோய், கோழிக் கழிச்சல் நோய் ஆகியவைகளுக்கான தடுப் பூசி செலுத்தும் முகாமை அவிநாசி கால்நடை மருத்துவமனையில் ஆட்சியர் எஸ்.வினீத் தொடங்கி வைத்தார். முகாமை தொடங்கி வைத்து மாவட்ட ஆட் சியர் பேசுகையில், நோயினால் பாதிக்கப் பட்ட கால்நடைகளில் தீவிர காய்ச்சலும், சினை ஈன்றும் தருவாயில் கருச்சிதைவும் ஏற் படுகிறது. மேலும் இந்த நோயினால் நஞ்சுக் கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைவினால் பொருளாதார இழப்பு ஆகியவை ஏற்ப டுகிறது. இந்நோய் மாட்டின் நஞ்சுக்கொடி போன்றவற்றை கையாளும் பட்சத்தில், மனி தர்களுக்கும் இந்த நோய் தீவிர தாக்கத் தினை ஏற்படுத்தும். தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், முதன் முறையாக, புரூ செல்லோசிஸ் எனப்படும் கருச்சிதைவு நோய்க்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்த நோய்க்கான தடுப்பூசி 4 மாதம் முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு மட் டும் இலவசமாக செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசியை ஒரு முறை செலுத்திக் கொண் டால், அந்த கிடேரி கன்றுகளுக்கு அதன் ஆயுள் முழுவதற்குமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கப்பெறும். காளை கன்றுக ளுக்கும் சினை மாடுகளுக்கும் எக்காரணம் கொண்டும் இந்த தடுப்பூசியை செலுத்தக் கூடாது. ஆகவே 4 மாதம் முதல் 8 மாதம் வய துடைய கிடேரி கன்றுகளுக்கு புரூசெல்லோ சிஸ் நோய்க்கான தடுப்பூசியை இலவசமாக கால்நடை நிலையங்கள் மூலமாக நடைபெ றும் முகாம்களில் செலுத்தப்படும். மேலும் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு வங்கிக ளில் குறைந்த வட்டியில் கடனைப்பெற்று கறவை மாடுகள் வாங்கி பயன்பெறலாம். இரண்டு மாடுகள் வாங்குவதற்கு ரூ. 1 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கப் படும். ஆவின் மருத்துவர்கள் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்ப டுகின்றது. கால்நடை காப்பீடுத்திட்டத்தின் மூலம் ரூ.240 செலுத்தி ரூ.35000 வரை கால் நடை காப்பீட்டுத்தொகை பெறலாம். ஆகவே கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்த வேண்டும். என்றார்.
கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் வெளியேற்றம்
உடுமலை, பிப்.2- பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றப்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயத்தை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை நகராட்சியில் 33 வார்டுகளில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் வசிக் கின்றனர். கடந்த 2013ஆம் ஆண்டு நகராட்சி யின் சார்பில் ரூ.56.07 கோடி மதிப்பில் நகர் பகுதி முழுவதும் 3,900 இறங்கு குழாய்கள் அமைக்கப்பட்டன. இக்குழாய்கள் மூலம் சாக்கடை நீர் சேகரிக்கபட்டு ஏரிப்பாளயம் பகுதியில் 7.81 எம்.எல்.டி திறன் கொண்ட சுத் திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. உடுமலை நகரில் சேகரிக்கபட்ட சாக் கடை நீர் குழாய் வழியாக ஏரிப்பாளையம் சுத் தகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல் லும் வகையில் இருந்த திட்டம் வரையரை செய்யப்பட்டன. ஆனால் குளறுபடி மற்றும் சுத்திகரிப்பு நிலையம் முறையாக பராம ரிப்பு இன்மையாலும் கழிவு நீரை ராசவாய் கால் ஓடையில் இரவு நேரங்களில் திறந்து விடப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வாக னங்கள் செல்ல முடியாயத வகையில் துர் நாற்றம் ஏற்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் ராசவாய்க்கால் ஓடையில் தண்ணீர் சென்று கொண்டு உள் ளது. இந்த நீர் குறுச்சேரி வழியாக சென்று உப் பாறு ஓடைக்கு சென்று இறுதியாக உப் பாறு அணையை சென்றயடைகிறது. இந்நிலையில், உடுமலை பாதாள சாக் கடை கழிவு நீரை முறையாக சுத்திகரிப்பு செய் யாமல் ஓடையில் கலப்பாதால் நீர் முழுவ தும் மாசு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பெரியளவில் சுகாதாரகேடு ஏற்படும் பாதாள சாக்கடை கழிவு நீரை முறையாக சுத்த கரிப்பு செய்து வெளியேற்ற வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நில அளவைப் பிரிவில் லஞ்சம், ஊழல் மார்க்சிஸ்ட் கட்சி போராட முடிவு
உடுமலை, பிப்.2- மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவல கத்தில் நில அளவைப் பிரிவில் லஞ்சம் ஊழ லுக்கு எதிராக முற்றுகை போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. நில அளவைப் பிரிவில் லஞ்சம் பெற்று நிலத்தை அளக்க செல்லும் அதிகாரிகள் மீது வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இப்போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். இந்த நில அளவைபிரிவில் வேலை யில் இருக்கும் அனைத்து பணியாளர்களும் முறைப்படி நில அளவைக்குச் செல்லாமல் பணம் தரும் நபர்களுக்கு மட்டுமே நிலத்தை அளக்க செல்கிறார்கள். மேலும் இவர்க ளுக்கு பணத்தை பெற்றுத்தர இப்பகுதி யில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலு வலர்கள் இடைத்தரகர் போல வேலை செய் கிறார்கள். நிலத்தை அளக்க பணம் தராத நபர் களின் நிலத்தின் வரைபடைத்தை கணினி யில் தவறாக திட்டமிட்டு பதிவேற்றம் செய்வ தால் நிலத்தை அளக்க முடியாது என்று அதி காரிகள் சொல்வது கண்டிக்கதக்கது. அவ் வாறு தவறாக கணினியில் பதிவேற்றம் செய்த நிலத்தை சரி செய்ய தனியாக ஒரு தொகை வசூல் செய்வதாக தொடர்ந்து புகார் தெரிவித்தும் வட்டாட்சியர் எவ்வித நடவ டிக்கை எடுக்காததை கண்டித்து முற்றுகை யிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப் பட்டு உள்ளது.
வதந்திகளை நம்ப வேண்டாம்: காவல்துறை அறிக்கை
திருப்பூர், பிப். 2 - திருப்பூர் அருகே பொங்குபாளையம் சாலையில் வட மாநில தொழிலாளர்கள், இருசக்கர வாகனத்தை பறித்து வைத்துக் கொண்டு, தமிழரை சுற்றி வளைத்து பணம் பறித் ததாக சமூக ஊடகங்களில் பொய்யான வதந்தி பரப்பப் பட்டு வருவதை நம்ப வேண்டாம் என்று காவல்துறை எச்ச ரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் வியாழனன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பொங்குபாளையம் சாலையில் மூன்று நாட்களுக்கு முன்பு மாலையில் நடந்த சிறிய வாகன விபத்து தொடர்பாக, வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இச்சம்பவத்தில் சம்பத்குமார் என்பவர் இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும்போது, பொங்குபாளை யம் ரோட்டில், வட மாநில தொழிலாளர்கள் மீது இடித்து விட் டார். இந்த விபத்தில் கீழே விழுந்தவரின் செல்போன் சேதம டைந்து விட்டது. அதை சரி செய்ய அவர் பணம் கேட்டிருக்கி றார். அதை கொடுத்துவிட்டு சம்பத்குமார் வந்துள்ளார்.இதை அவரே வாக்குமூலமாக வீடியோ பதிவில் தெரிவித்து இருக்கிறார். இதை சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ் அப் குழுக்களில், “பைக்கை பிடுங்கி வைத்து அட்டகாசம், தமிழரை சுற்றி வளைத்து பணம் பறித்த வடமாநில கும்பல்” என தவறான பதிவுகளை பரப்புகின்றனர். இந்த வதந்திகளை நம்ப வேண்டாம். அது பொய்யானது. இவ்வாறு வதந்தியை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என திருப்பூர் மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:49.12/60அடி நீர்வரத்து:782கன அடி
வெளியேற்றம்:1121கனஅடி
அமராவதி அணை நீர்மட்டம்:71.92/90அடி.நீர்வரத்து:103கனஅடி
வெளியேற்றம்:908கனஅடி
ஆவணங்கள் இல்லாத பணம் பறிமுதல்
ஈரோடு, பிப்.2- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அப்பகுதியில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு, கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்த லில் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படையினரால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.9 லட்சத்து 43 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதனன்று இரவு ஈரோடு பேருந்து நிலை யம் அருகே நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோத னையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழி யாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்திய போது ரூ.1.74 லட்சம் பணம் இருந்தது. இது குறித்து காரை ஓட்டி வந்த நபரி டம் விசாரித்த போது அவர் ஈரோடு வி.வி.சி.ஆர். நகர் பகு தியைச் சேர்ந்த குமரவேல் (39) என்பது தெரிய வந்தது. மேலும் அந்த பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் நிலை கண் காணிப்பு குழுவினர் ரூ.1.74 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப் பாட்டு அறையில் ஒப்படைத்தனர். இந்த பணத்திற்குரிய ஆவ ணங்களை காண்பித்து பணத்தை பெற்று செல்லுமாறு அவரி டம் அறிவுறுத்தி உள்ளனர்.
பழங்குடியின இளைஞர்கள் மீது பொய்வழக்கு வனத்துறையை கண்டித்து கிராம கூட்டத்தில் தீர்மானம்
உதகை, பிப்.2- ஆனைக்கட்டி உள்ளிட்ட 7 கிரா மங்களை சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதியக்கூடாது என்று கிராம மக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இருளர், குரும்பர், தோடர், கோத்தர், பனியர், காட்டு நாயக்கர் ஆகிய 6 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வரு கின்றனர். இதில் இருளர் இன பழங் குடியின மக்கள் உதகை அருகே உள்ள ஆனைக்கட்டி, சொக்கநள்ளி, சிறியூர், வாழைத்தோட்டம், மாயார், செம்மநத்தம், பொக்காபுரம் உள் ளிட்ட 7 கிராமங்களில் பல தலை முறைகளாக வாழ்ந்து வருகின்ற னர். இந்த கிராமங்கள் முதுமலை புலி கள் காப்பக வன பகுதிக்குள் அமைந் துள்ளது. கடந்த சில வருடங்களாக தங்களது வாழ் உரிமைகளை தடுக் கும் விதமாக வனத்துறையினர் செயல் பட்டு வருவதாக பழங்குடியின மக் கள் குற்றஞ்சாட்டி வருகின்னர். இந் நிலையில், உதகை அருகே உள்ள ஆனைக்கட்டி கிராமத்தில் வனத்து றையை கண்டித்து ஒன்று கூடிய 7 கிராமங்களை சேர்ந்த மக்கள் 7 ஊர் தலைவர் சங்கர் தலைமையில் ஆலோ சனையில் ஈடுபட்டனர். அப்போது 7 கிராம மக்களும் தங்களது பாதிப்பு கள் குறித்து விளக்கினர். இதைத்தொடர்ந்து இருளர் இன பழங்குடியின இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யக்கூடாது. 2006 வன உரிமை சட்டத்தின் படி தங் களுக்கு அங்கீகாரம் வழங்கியும், உரி மைகள் மறுக்கபடுவதாகவும், பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தங்களது மூதாதையர்கள் கல்லறை கள் மற்றும் கோவில்களுக்கு சென்று வர தடை விதிக்கக்கூடாது. ஊருக் குள் புகுந்து, பிடிக்கப்படும் மனிதர் களை தாக்கும் யானை, கரடி, சிறுத் தைகளை கிராம பகுதியையொட்டி உள்ள வனப்பகுதியில் விடக்கூடாது. பழங்குடியின கிராமங்களுக்கு செல் லும் சாலைகளை சீரமைக்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றபட்டன. மேலும், தங்களது பிரச்சனைகள் குறித்து விரைவில் மாவட்ட ஆட்சி யர் மற்றும் பழங்குடியினர் ஆணை யத்தில் முறையிட முடிவு செய்து இருப்பதாக தெரிவித்தனர். இதில், ஆனைக்கட்டி ஊர் துணைத்தலை வர் பசுவன், முன்னாள் தலைவர்கள் பொம்மராயன், பி.பசுவன், வன உரி மைக்குழு தலைவர் மணி உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தற்கொலை
பென்னாகரம், பிப்.2- ஒகேனக்கல் வனசரகத் திற்குட்பட்ட எலந்தமரத்து பள்ளம் வனப்பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க அடை யாளம் தெரியாத நபர் மரத் தில் தூக்கிட்டு இறந்த நிலை யில் கிடந்தார். இதுகுறித்து ஒகேனக்கல் வனத்துறை யினர் காவல் துறையின ருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பெயரில் சம்பவ இடத் திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு, தருமபுரி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.