மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
சேலம், செப்.12- சேலம் மாவட்டம், கெங்க வல்லியை அடுத்த நடுவலூ ரைச் சேர்ந்தவர் வளர்மதி (21). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பாலிடெக் னிக் கல்லூரியில் படித்து வரு கிறார். இவருக்கும், கெங்க வல்லியை சேர்ந்த பாரத் (26) என்பவருக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனிடையே குழந்தை இல் லாததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 9 மாதங் களாக கணவரை பிரிந்து, வளர்மதி தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து கல்லூ ரிக்கு சென்று வருகிறார். இந் நிலையில், வளர்மதியை பாரத் திட்டி, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள் ளார். இதில் காயமடைந்த வளர்மதி, கெங்கவல்லி மருத் துவமனயைல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் அளித்த புகா ரின்பேரில் கெங்கவல்லி போலீசார், பாரத் மீது வழக் குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
உதகை மலை ரயில் சேவை ரத்து
உதகை, செப்.12- தொடர் மழை காரணமாக குன்னூர் - உதகை இடையே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் மலை ரயில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப் போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சில இடங் களில் கனமழையும் பெய்து வருகிறது. தொடர்மழையின் காரணமாக சாலையோர மண் ஈரப்பதமாக உள்ளது. இத னால் ஆங்காங்கே சாலையில் மண் மற்றும் மரங்கள் சரிந்து விழுகிறது. இதற்கிடையே திங்களன்று குன்னூர் லவ்டேஸ் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் ரயில் தண்டவாளம் பாதிப்படைந்தது. இதன் காரண மாக திங்களன்று காலை 7.45 மணிக்கு குன்னூரிலிருந்து உத கைக்கு செல்லும் சிறப்பு மலை ரயில் (06141) சேவை நிறுத்தப் பட்டது. இதேபோல் உதகையிலிருந்து காலை 9.15 மணிக்கு குன் னூருக்கு செல்லும் மலை ரயில் சேவையும் நிறுத்தப்பட் டது. திடீரென ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். இதன்பின் பயணிகள் பேருந்து மற்றும் வாடகை வாகனங்களில் உதகை மற்றும் குன்னூருக்கு சென்றனர். இதனிடையே உதகை தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான தீய ணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தண்ட வாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர்.
நாளை மின் குறைதீர்க்கும் நாள்
தாராபுரம், செப்.12- தாராபுரம் மற்றும் அவிநாசி பகுதிகளில் புதனன்று (நாளை) மின்குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பல்லடம் மின்பகிர்மான வட்டம், தாராபுரம் கோட்டத்திற்குட் பட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் (நாளை) புதன்கிழமை, பல்லடம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. தாரா புரம் தளவாய்பட்டிணம் சாலையில் உள்ள மின்வாரிய கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதேபோன்று அவிநாசி மின் கோட்டசெயற்பொறியாளர் அலுவலகத்தில் புதன்கிழமை (நாளை) காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகி றது. இதில், தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின் பகிர் மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் கலந்து கொண்டு மின் நுகர்வோர் குறைகளை நேரில் கேட்டறிந்து நிவர்த்தி செய்கி றார். இதில், மின் நுகர்வோர் கலந்து கொண்டு பயன்பெறு மாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு பட்டா வழங்க வலியுறுத்தல்
திருப்பூர், செப்.12- திருப்பூரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்கு மாறு திருப்பூர் தெற்குத் தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜ், மாநில வருவாய் மற் றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரனுக்கு கடிதம் எழுதியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் சமயம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியருக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே வரு வாய்த் துறை அமைச்சர் மாவட்ட நிர்வா கத்திற்கு வலியுறுத்துமாறு எம்.எல்.ஏ., க.செல்வராஜ் கேட்டுக் கொண்டுள் ளார். குறிப்பாக நல்லூர் ராக்கியாபாளை யம் கிராமம் க.ச.எண் 736/1ஏ1 பட்டுக் கோட்டையார் நகர் வடக்கு பகுதியில் 124 குடும்பங்கள், தொட்டிபாளையம் கிராமம் மிலிட்டரி காலனி 90 குடும்பங் கள், 15 வேலம்பாளையம் கிராமம் கொங் கணகிரி பகுதியில் 175 குடும்பங்கள், நெருப்பெரிச்சல் கிராமம் அண்ணா நகர், பாண்டியன் நகர் ஒத்தலைன் பகு தியில் 50 குடும்பங்கள், காசிபாளையம் ஏடி காலனி நீர் நிலையில் வசித்து அப் புறப்படுத்தப்பட்டவர்களில் 15 குடும்பங் கள், கொங்கணகிரி கோவில் தென்புறம் நத்தம் புறம்போக்கில் வசிக்கும் 8 குடும் பங்கள், தொட்டிபாளையம் கிராமம் நத்தம் புறம்போக்கு ஏடி காலனியில் வசிக்கும் 13 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேல் 45 வருடங்கள் வரை இங்கு வசித்து வரு கின்றனர். இவர்களுக்கு பட்டா வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்த வேண்டும் என்று க.செல்வராஜ் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
போக்கோ சட்டத்தில் ஒருவர் கைது
திருப்பூர், செப்.12- திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி யில் வெள்ளியன்று இரவு 3 வயது பெண் குழந்தை வீட்டிற்கு வெளியே நின்று விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப் போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் அந்த குழந்தை யிடம் பேசி, தகாத முறையில் ஈடுபட்டுள்ளார். இதை கண்ட குழந்தையின் தாய் கூச்சல் போட்டதும், அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அந்த நபரை பிடித்து திருப்பூர் கொங்குநகர் சரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணை யில் அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த சகுபர் சாதிக் (43) என்பதும், அவர் பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளி யாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. மேலும், 3 வயது பெண் குழந்தையிடம் தகாத முறையில் ஈடுபட்டதை ஒப் புக்கொண்டார். இதையடுத்து போலீசார் சகுபர் சாதிக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்த னர்.
8 மணிநேர வேலையை உறுதிப்படுத்திடுக தனியார் பாதுகாவலர் மாநாடு வலியுறுத்தல்
கோவை, செப்.12- தனியார் நிறுவனங்களில் காவலாளியாக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 8 மணிநேர வேலை என்பதை உறுதிப் படுத்த வேண்டும் என கோவை மாவட்ட தனியார் பாதுகா வலர்கள் சங்கத்தின் மாநாடு வலியுறுத்தியுள்ளது. சிஐடியு கோவை மாவட்ட தனியார் பாதுகாவலர்கள் (செக் யூரிட்டி) சங்கத்தின் 4 ஆவது மாவட்ட மாநாடு கோவை கண பதி இன்ஜினியரிங் சங்கத்தில் தலைவர் எம்.பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர்.வேலுசாமி துவக்கிவைத்தார். செயலாளர் என்.செல்வராஜ், பொருளாளர் பி.விஜய்பாஸ்கர் ஆகி யோர் அறிக்கையை முன்வைத்தனர். இதில், தனியார் பாது காவலர்களுக்கு 8 மணிநேர வேலை என்பதை உறுதிப் படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ20 ஆயி ரம் நிர்ணயிக்க வேண்டும். வார விடுமுறை நாட்கள் மற்றும் ஓவர் டைம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், தலைவராக எம்.பரமேஷ்வரன், செயலாள ராக என்.செல்வராஜ், பொருளாளராக பி.விஜயபாஸ்கர் உள் ளிட்ட 15 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப் பட்டது. மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு ஆட்டோ தொழி லாளர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஆர்.செல்வம் உரையாற்றினார். முடிவில் பி.ரவி மாரியப்பன் நன்றி கூறி னார்.