districts

img

தேர்தல் ஆதாயம்: ஆர்.எஸ்.எஸ் பாஜக கும்பல் தமிழகத்திற்கு எதிராக வதந்தி பரப்புகிறது

திருப்பூர், மார்ச் 5 - நாடாளுமன்றத் தேர்தலில் வடமாநிலங்களில் ஆதாயம் தேட வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ்நாட்டிற்கு எதிராக பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பல் வதந்தியை  பரப்பி உள்ளதாக அனைத்துக் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். திருப்பூரில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திமுக வடக்கு மாநகர செயலாளரும்,  மாநகராட்சி மேயருமான என். தினேஷ்குமார் தலைமையில்  அனைத்து மதச்சார்பற்ற ஜன நாயகக் கட்சிகள் கூட்டம் நடை பெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.சுப்பராயன் எம்.பி., மாவட்ட செயலாளர் ரவிச் சந்திரன், திமுக மாவட்ட செய லாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ.,  மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஆர்.கிருஷ்ணன், கோபி, மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆர். நாகராஜ் எம்.சி., முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சையது முஸ்தபா, கொமதேக நிர்வாகி  ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற் றனர். இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம்: தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக  வாழ்க்கையில் பெரும் குழப்பத் தையும் நெருக்கடியையும் ஏற்படுத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணி ஆகிய சமூக விரோத சக்திகள் தொடர்ந்து சதி களில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி யையும், சமூக அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலை குலைத்திட பிற்போக்கு சக்திகள் அரசியல் உள்நோக்கத்தோடு பல நடவடிக்கைகளை தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, சமீப சில மாதங்களாக புலம்பெயர்ந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பணி யாற்றி வரும்  வடமாநில தொழிலா ளர்களை தமிழ்நாட்டைச் சார்ந்த வர்கள் தாக்குவதாக பொய்யான  வதந்திகளை திட்டமிட்டே பரப்பி  வருகின்றனர்.

வலைத்தளங்கள், முகநூல்,  வாட்சாஸ் ஆப் போன்ற சமூக ஊட கங்கள் வாயிலாக இத்தகைய வதந்திகள் பரப்பப்பட்டு வரு கின்றன. இதனால் தொழிலா ளர்கள் மத்தியில் அச்சமும்‌, பீதியும் ஏற்பட்டுள்ளது. ஆனால் திருப்பூரிலோ, தமிழ்நாட்டின் பிற தொழில் நகரங்களிலோ, வட மாநில தொழிலாளர்கள் தாக்கப் பட்ட சம்பவம் எந்த இடத்திலும் எந்த வித மோதல்களும் நடைபெற வில்லை.  ஆனால் மோதல்கள் நடை பெற்றதைப் போல, வட மாநிலங் களில் நடைபெற்ற சில மோதல் சம்ப வங்களை அரசியல் ஆதாயத்திற் காக தமிழ்நாட்டில் நடந்ததைப் போன்று‌ திரித்து, சித்தரித்து பீகார், ஜார்கண்ட், உத்திரபிரதேசம் போன்ற‌ சில வட மாநிலங்களில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் பரப்பி  வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் வட மாநில மக்கள்‌ மத்தியில் அரசியல் ஆதரவைப் பெறுவதற்காக திட்ட மிட்டே இதுபோன்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது  அடிப்படையே இல்லாத அரசியல்  அவதூறு என்பதை தமிழ்நாட்டு அனுபவம்‌ நிரூபித்து வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு தொழில் மையங்களில் நேபா ளிகள், வங்காளிகள், பீகாரிகள் பஞ்சாபிகள், ராஜஸ்தானிகள், குஜராத்திகள் என பல வட மாநிலத் தவர்கள் தொழில் செய்கிறவர் களாகவும், தொழிலாளர்களா கவும் பல்லாண்டுகளாக இணக்கத் தோடு வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி யினால் தொழிலாளர்களின் தேவை  அதிகரித்துள்ளது. இங்குள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை தொழில் வளர்ச்சிக்கு தகுந்தாற் போல போதுமானதாக இல்லாத  காரணத்தினால் வடமாநிலத் தொழி லாளர்களின் தேவையும்‌ அதிகரித் துள்ளது. 

இதனால் வடமாநில தொழிலா ளர்களோடு மோதல் என்பதற்கான அடிப்படைகள் எதுவும் இல்லை என்பது நிதர்சனமானது. எனவே, தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தையும், பீதி யையும் ஏற்படுத்துகிற வதந்தி களை பரப்புகின்ற சமூகவிரோத சக்திகளை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுத்து, ஒடுக்க   வேண்டும் என்று இந்த கூட்டத்தின்  வாயிலாக கேட்டுக் கொள்கிறோம். இந்த விசயத்தில் தமிழ்நாடு அரசு  எடுக்கும் அனைத்துவித நடவ டிக்கைகளுக்கு தொழிலாளர் களும், பொதுமக்களும் ஆதரவாக  நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தமிழ்நாடு குறித்த தவறான பொய்ச் செய்திகளை, வதந்தி களை தொடர்ந்து பரப்பிவரும்  பீகார்‌மாநில பாஜக நிர்வாகி கள்‌ மீதும், சமூக வலைத்தளங் களில் தமிழ்நாடு குறித்து தவறான‌ செய்திகளை பரப்புவோர்‌மீதும் சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசை வலியுறுத்துகிறோம். “தமிழ்நாட்டிற்கு எதிரான‌ பொய் பிரச்சாரத்தை நிறுத்துக!” என்ற முழக்கத்தின் கீழ் தமிழக, வட மாநிலத் தொழிலாளர்களை அனைத்து கட்சிகளின் சார்பில்  ஒருங்கிணைத்து இவ்வதந்தி களை முறியடிப்போம். இவ்வாறு  தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது.