districts

img

கல்லார்குடி; பழங்குடியின மக்களின் குடிசைகளை தகர்த்து எறிந்த வனத்துறை

பொள்ளாச்சி, டிச.3-  கல்லார்குடி பழங்குடியின மக்களின் குடிசைகளை  தகர்த்து எறிந்த வனத்துறையின் நடவடிக்கைக்கு அனைத்துக் கட்சி கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப் பகத்திற்குட்பட்ட வால்பாறை அருகே கல்லார்குடி வன கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த 2019 ஆம்  ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் அங்கு வசித்து வந்த பழங்குடியின காடர் சமூகத்தைச் சேர்ந்த 40க்கும்  மேற்பட்ட குடும்பத்தினர் வால்பாறை தாய்முடி தேயிலைத் தோட்ட குடியிருப்புகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர். இதனையடுத்து தங்களது பூர்விக இடமான கல்லார்குடி அருகே உள்ள தெப்பகுள மேடு பகுதியில் நிலம் ஒதுக்கீடு செய்யக்கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

இந்நிலையில், கடந்த அக்டோபர்  மாதம் 4ம் தேதியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினர் பெ.சண்முகம் தலைமையில்   தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், ஏக்தா பரிசத் உள்ளிட்ட அமைப்புகளுடன் கல்லார்குடி பழங்குடியின மக்கள் வனத்திற்குள் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து கல் லார்குடி  பழங்குடியின மக்களுக்கு நிலப்பட்டா வழங்க தமி ழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். இதன் படி மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  தலைமை யில் 21 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக நிலப்பட்டா வழங் கப்பட்டது. இந்நிலையில் வெள்ளியன்று மானாம்பள்ளி வனச் சரகர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர் திடீ ரென கல்லார்குடி தெப்பகுளமேடு பகுதியில் பழங் குடியின மக்களின் குடிசைகளை அராஜகமான முறையில் அகற்றினர்.

இதனையடுத்து உடனடியாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி மற்றும் சமூக கூட்டியக்கத்தினர் புகார் மனு அளித்தனர்.  அம்மனுவில் கூறியிருப்பதாவது ;- வனத் துறையினரின் இந்த அராஜக செயல் கண்டிக்கத்தக்கது. பழங்குடியின மக்களை அச்சுறுத்தும் விதமாக வனத்துறையின் நடவடிக்கை அமைந்துள்ளது. ஆகவே, தமிழக அரசு உடனடியாக நில அளவை செய்து அம்மக்களுக்கு நிலப்பட்டா வழங்கிட வேண்டும். மேலும், பழங்குடியின மக்களின் குடிசை வீடுகளை இடித்த வனத்துறை வனச்சரகர் மணிகண்டன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டிருந்தது. இதற்கு பதிலளித்த பொள்ளாச்சி சார் ஆட்சியர் ஞானதேவ் சுபம் தாக்கரே ராவ்,  சனிக்கிழமை உடனடி யாக வருவாய் துறையினரால் நில அளவை செய்யப் பட்டு நிலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதியளித்தார். இதனையடுத்து அனைவரும்  கலைந்து சென்றனர்.

;